STORYMIRROR

Ravana Sundar

Others

3  

Ravana Sundar

Others

துன்பத்திலும் இன்பம்

துன்பத்திலும் இன்பம்

1 min
240

நோக்கமில்லா இலக்குகளை நோக்கி சங்கிலியில் பிணையப்படாத

சிக்குண்ட குடும்பவாசிகள் நாங்கள்,

நிம்மதியான வாழ்க்கையை தேடி நித்தமும் இன்பத்தை தொலைக்கும்

அறிவின் இரத்தநாளங்கள் நாங்கள்,

பசியை விரட்ட பிடித்த ஓட்டம் உடை,உறைவிடம் என்று மென்மேலும் ஒட்டத்தை அலங்கரிக்கிறது,

தீரா மோகத்தில் திளைத்துவிட்டோம்,

கால்களுக்குள் நாகங்களை சுற்றிவிட்டோம்,

விடைதெரியா வினாக்களை சுமந்து, விடியலை நோக்கி பயணிக்கும் நடுத்தர நாயகர்கள் நாங்கள்,

இயற்கையின் முரண் நுண்ணுயிரியில் பிரசவிக்க,

ஓடிய கால்களுக்கு கட்டாய ஓய்வு,வியாபார வேட்கைக்கு விலக்கு, மனிதத்தின் புனிதம் மீட்சி,

மனதில் புதைந்த குமறல்களின் பிரதிபலனோ,

எங்கள் மழலைகளின் வாழ்நாள் தவமோ,

விளைவின் பாதை எதுவாயினும், துன்பத்தில் விளைந்த சிற்றின்பத்தை குடும்பத்தோடு கடக்கிறோம் கொரனாவுடன்..



Rate this content
Log in