மீரா
மீரா
1 min
23.9K
தாய்மைக்கு தாய்மை சொல்லி தந்தவள்;
சிறு வயதில் தாயை இழந்ததால்!
வளர்ந்து வரும் பெண்ணாக அல்ல;
பெண் சிங்கமாக உருவெடுத்தாள்!
உயிரை இறுக்கி நெருக்கும் உறவினர்கள் மத்தியில்;
உயிரே போனாலும் தன்மானம் பெரிது என்பாள்!
<
Advertisement
p> சிறு மிளகாயில் இருக்கும் காட்டத்தைப் போல்;
தன் பேச்சில் உண்மைகளை எடுத்துரைப்பாள்!
அன்று, அந்த மீராவின் கையிலோ வீணை;
தன் கண்ணனுக்காக!
இன்று, இந்த மீராவின் கையிலோ புத்தகங்கள்;
தன் எதிர்காலத்திற்காக!