மாறாத காலம்
மாறாத காலம்
குளிர் காலம் முதல் மழை; உன்னை காண என் கண்கள் போதவில்லை,
நீ வரும் முன்னே வீசும் மண் வாசனையில் என் சிறுவயது ஞாபகங்கள் கண் முன்னே தோன்றும்,
வயலின் நடுவே நின்று மழையில் ஆடும் தருணம் என் அம்மா திட்டுவதும் ஒரு மகிழ்ச்சி தான்.
மழை வந்த பின் என் அன்னை சுட்டுத்தரும் தோசையும் அமிர்தம் தான் என்னக்கு,
என் அன்பு பாட்டி செய்யும் காரா சட்னியுடன் உண்ணும் இரண்டு தோசை அவ்வளவு ருசி,
இன்றும் அப்படி ஒரு அருமையான சுவையை எங்கும் காண இயலாது.
மழைநீர் சொட்ட அந்த சத்தத்தில் பிறக்கும் இசை எவ்வளவு இனிமையோ,
அது போல என் தாத்தா பாடும் கிராமிய மழை பாட்டும் அவ்வளவு அற்புதம்,
அன்னையின் மடியில் படுத்து ஊறங்கும் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைவேன்.
பல வருடங்களுக்கு ஓடிவிட்டன இந்த வருடத்தின் முதல் குளிர் காலமழை பொழிகிறது,
நான் பாடும் பாட்டை கேட்டு ஆனந்தம் கொள்ளும் என் தாத்தாவின் முகமும்,
என் அம்மா செய்த காரா சட்னியை தோசையுடன் சுவைத்து உண்ணும் என் பாட்டியும் மாறவேயில்லை.
மனதில் இருக்கும் நீங்க இளமை கால நிகழ்வுகள் இன்றும் நிகழும் சற்று மாற்றத்துடன்,
மாற்றம் இருப்பினும் இதை நானும் ரசிக்கிறேன் மகிழ்கிறேன் கொண்டாடுகிறேன்,
நான் மட்டும் மாறிவிட்டேன் உருவத்தில் ஆனால் என் மனம் என்றும் மாறாது.
