STORYMIRROR

❤️ Thara ❤️

Romance

4  

❤️ Thara ❤️

Romance

காதல் வரம் ❤️

காதல் வரம் ❤️

1 min
195

நீ என்னை கைகோர்த்து நடக்கும் போது என் தந்தையின் பாதுகாப்பு உணர்ந்தேன்!!


நீ அக்கறையாய் என்னை அனு சிரிப்பதில் தாயின் அரவணைப்பை உணர்ந்தேன்!!


நீ சிறு சிறு சண்டைகள் போட்டாலும் அதில் என் அண்ணனின் பாசத்தை உணர்ந்தேன்!!


நீ கோபத்தில் என்னை திட்டும்போது என் தம்பியின் சுட்டி தனத்தை உணர்ந்தேன்!!


நீ என்னை அடித்து விளையாடும் போது என் நண்பர்களின் நட்பை உணர்ந்தேன்!!


நீ அறிவுரை கூறும்போது என் ஆசிரியர் போல் உணர்ந்தேன்!!


நீ வாழ்க்கையை இந்த நெறிகளை வாழவேண்டும் என்று சொல்லும்போது என் தாத்தா பாட்டி உன்னிடம் உணர்ந்தேன்!!


நீ என்மேல் உயிராய் இருப்பதை பார்த்து உன் காதலை உணர்ந்தேன்!!


நீ கட்டிப்பிடித்து என்னை தழுவிய போது உன் அன்பை உணர்ந்தேன்!!


நீ சிரிப்பதைப் பார்த்து என் குழந்தை போல் உணர்ந்தேன்!!


நீ என் கண்களைப் பார்க்கும் போது உன் கரு விழிகளில் என் முகம் உன் உலகத்தில் நான் மட்டும்தான் என உணர்ந்தேன்!!


நீ நான் சிரிப்பதற்காக உன் உயிரையும் தருவாய் என உணர்ந்தேன்!!


என் வாழ்க்கையில் அனைத்து உறவுகளும் தனித்தனி தான் உன்னை பார்ப்பதற்கு முன்


உன்னை பார்த்தபின் அனைத்து உறவுகளும் உன்னுடைய ஒரே முகத்தில்!


நீ கிடைத்தது எனக்கு வரம் தான்!!


காதல் தந்த அருமையான பொக்கிஷம்!!


என் அன்பே!!❤️



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance