இயற்கை
இயற்கை


கல்லுக்குள் ஈரம் கசிய
தனக்கென பாதை அமைத்து ஓடும் நதி
தென்றல் கிளைகளோடு பேச
பூவின் நறுமணமோ
மலைகளுக்கு மயக்கம் தர
ஈரச்சாரலை மேகம் கரைய
புல்லில் புன்னகை பூத்தது
வானவில்லுடன் விலங்குகள் விளையாட
வண்டுகள் சிறகுகளுடன் வட்டமிட
பூவுடன் வண்ணத்துபூச்சிகள் இளைப்பாற
இயற்கையின் எழிலில்
தன்னை மறந்து மயங்கியது அழகு.