இணைவோம் இதயத்தினால்
இணைவோம் இதயத்தினால்


புத்தகங்களோடு யுத்தங்கள் செய்தோம்,
நித்தமும் சிரிப்பு சத்தங்களோடு சுற்றி திரிந்தோம்,
சிலரின் நிறம் அறிந்தோம்,
சிலரின் நிஜம் புரிந்தோம்,
இங்கு ,
ஒற்றுமையினில் வேற்றுமை கண்டு கரைந்தோர் சிலர்,
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கரை சேர்ந்தோர் சிலர்,
நான்காண்டு காலமாய் நாம் கொண்ட பந்தம் முடியும் மணித்துளியில்,
மனம் தெளிந்தோர் பலர்,
தொலை தூரம் சென்றாலும் தோடு வானாய் தொடர்வோம்,
சரிவிலும் சேர்ந்திருப்போம்,
பிரிவிலும் பரிவோடிருப்போம்,
என்றும் ஒன்றாய் இணைந்திருப்போம்,
இணையத்தினால் அல்ல,
நம் இதயத்தினால்