இளவேனில்
இளவேனில்




இளி என்னும் பண்ணையிசைக்கும்
வண்டினை யாழாகவும்
கரிய கண்களையுடைய
தும்பியைக் குழலாகவும்,
களிப்பையுடைய
குயில்களை முழவாகவும்
மணமுறும் மலர்ப்
பொழில்களை அரங்காகவும்
கணவரைப் பிரிந்த பெண்களின் துயரினைக்
கணவன் உணரத் தூது சென்ற பாணன்,
யாழ்மேல் வைத்துப் பாடும்
பாட்டைப் பாட்டாகவும் கொண்டு
இப்போது இளவேனில் புதியதாக
ஆடலைத் தொடங்கினான் .