இல்லை 🤞🏻...
இல்லை 🤞🏻...
சேர்ந்து நின்று புகைப்படம் இல்லை
சாலையோர நடைபயணம் இல்லை
பார்த்தவுடன் நினைவூட்ட பரிசுகள் இல்லை
வயிறு வலிக்க சிரித்த உரையாடல் இல்லை
செல்ல சிணுங்கல்கள் இல்லை
அதற்கு பதில் சமாதானங்கள் இல்லை
கிண்டல்கள் இல்லை
நெடு நேர பேச்சுகள் இல்லை
நின்று யோசிக்க நினைவுகள் பெரிதாய் இல்லை
கானா தூரம் செல்லும் நொடி கூட கைகள் குலுக்கியது இல்லை
இத்தனை "இல்லை" உன் நினைவுகளை என் மனம் தேடும் வரை புரிந்ததில்லை
நீ என்னுடையவன் இல்லை
எனக்கானவன் இல்லை
என்னோடு இல்லை என்ற உண்மையை உரைக்க தான் இந்த இல்லைகள் என்னை இம்சை படுத்தியது போல ❤
June 15 🥰
உன்னவள்...

