அரசன்
அரசன்
கொள்கைகளை உடையவன்
தவறிழைத்தவர்களை தண்டிக்கும்
உரிமை உள்ளவன்
நீதிகளின் அதிபதி
நிம்மதிக்கு இவன் உறுதி
வரிகளையும் வசூலிப்பான்
வாழ்வாதாரம் காக்க வேண்டி
துணிந்து நிற்பான்
அனைவர்க்கும் முன்னால்
பணிந்து போவான்
சான்றோரின் சொல்லிற்கு
செல்வம் அதிகம் இருந்தாலும்
மக்களின் நலனை மட்டுமே
கருத்தில் கொண்டு
தன் சுயமுடிவுகளையும்
துறப்பவனே அரசன்!!
