STORYMIRROR

DEENADAYALAN N

Drama

4.4  

DEENADAYALAN N

Drama

அபிமன்யூவாகிய நான்..!

அபிமன்யூவாகிய நான்..!

1 min
207



வாழ்க்கை ஒரு

சக்கர வ்யூகம் - அதில்

உள் செல்லத் தெரிந்த

வெளி வரத் தெரியாத

அபிமன்யூ நான்!


பிறப்பெனும்

தெரு வழியாய்

உள்ளே நுழைந்தவன்!


நுழைந்த உடன் கிடைத்தது

பாசமும் பரிவும் அன்பும்…


அதன் பின் கிடைத்ததெல்லாம்

பொறுப்பெனும் பெயரில்

சோதனைகளே

வெளிவர முடியாத

வேதனைகளே!


மழலைப் பருவத்தில்…

என் பால் மனம்

தாயின் பிரிவால்

பாழ் மனம் ஆனது!

பெரும்பகுதி நேரம்

‘டே கேர்’ சிறையில்!

வெளிவரத் தெரியவில்லை!


மாணவப் பருவத்தில்…

படி இல்லையேல் அடி

என்றது பள்ளி

ஆழ் மன அடியில்

எரிந்தது கொள்ளி!

வெளிவரத் தெரியவில்லை!


விடலைப் பருவத்தில்…

காதல் எனும் பெயரில்

இனம் புரியா ஈர்ப்புகள்

இன்னல் தந்த குழப்பங்கள்

வெளிவரத் தெரியவில்லை!


பின்னர் வந்தது…

வேலை மணம் குழந்தைகள்

கால சுழற்சியில்

கடமைகள் பொறுப்புகள் சுமைகள்

தொடர்ந்து

வந்ததெல்லாம் சோதனைகளே

வெளி வர

முடியாத வேதனைகளே!


அதன்பின் வந்தது…

மகன் மகள் திருமணங்கள்

மருமகள் மருமகன் வருகை

அவரவர் சித்தம்

அவரவர் போக்கு!

நான்…

அளந்து பேசினால் கூட

அலட்சியமே பரிசு!

அதிர்ந்து பேசினாலோ

அடக்குமுறைப் பாய்ச்சல்..

வெளிவரத் தெரியவில்லை!


தொடர்ந்தது…

பேரக்குழந்தைகளின்

நேச அலை!

மாட்டிக்கொண்டதோ

பாச வலை!

வெளிவரத் தெரியாத

வெற்றிடத்தில் நான்..!




முதிர்ந்தது வயது

வந்தது அயர்ச்சி

முக்கியத்துவம்

இல்லாத வாழ்க்கை!

வெளிவரத் தெரியவில்லை!



வாழ்க்கை ஒரு

சக்கர வ்யூகம் - அதில்

உள் செல்லத் தெரிந்த

வெளி வரத் தெரியாத

அபிமன்யூ நான்!


(கோவை என்.தீனதயாளன்)


என். தீனதயாளன், C-323, நித்யா கார்டன்ஸ் அபார்ட்மென்ட்ஸ், சங்கரலிங்கனார் ரோடு, மணியகாரன் பாளையம்,கோயமுத்தூர்-641006; தமிழ்நாடு

கைபேசி: 99942 91880; 79041 78038       மின்னஞ்சல்:        deenajamuna@yahoo.co.in



Rate this content
Log in