அமீபாவோடு அனுவானேன்
அமீபாவோடு அனுவானேன்


நகரின் நடுவே அசதியில்
மாயமான மாந்திரிகமான
நாகரிகம் விட அநாகரிகமாய் திரிந்து
நசுங்கப்பட்டு நசிங்கிப்போன நிலை
குரோத ஒலியில் கொந்தளித்தேன்
வாழ்க்கை வெறுமாய் பார்த்தேன்
வனத்திலொரு நாள்
வாழ்க்கை வரமாய் தொடங்கியது
அடேயப்பா கண்ணில் யௌவனம் எவ்வண்ணம்
நிர்வாணமாய் திரிந்தேன்
மலர்கள் கைக்குட்டையாகின
மரங்கள் சட்டையாகின
ஏக்கத்தின் தாக்கம்
ஏகாந்தத்தில் ஏகாதிபத்தியம்
என் பக்கம் யார
்??
உறவுகள் நல் வரவுகள்
கூட்டுக்குள் கொஞ்சும் உறவுகள்
காட்டுக்குள் கூட்டுக் குடும்பம்
வாடிய மகிழம்பூ ஏங்குவது மண்ணை
வேரோ வேறை விடாமல் அணைப்பது மண்ணை
வனத்தில் மிடுக்குடன் விலங்கில்லை
வண்ணம் பூசிய அடுக்குகள் ஆங்கே
வாடியது கண்ணீர்
உண்மையான கனியை உண்டேன்
உளமார கண்ணில் கண்அடித்தேன்
களைப்பாற இலையில் இளைப்பாறி
நயமான ஒலியில் நிலைகுளைந்தேன்
இம்மியும் பிறழாத மெய்மை
ஓரனு அமீபாவோடு அனுவானேன்…