Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

இந்திரா சண்முகானந்தன்

Abstract Drama Inspirational

4.4  

இந்திரா சண்முகானந்தன்

Abstract Drama Inspirational

தலைவன் இருக்கிறான்

தலைவன் இருக்கிறான்

2 mins
181


   காலை வேளையிலே மின்வெட்டு காரணத்தினால் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். நேரம் கடந்தமையால் சலிப்பை ஏற்படுத்தியது.பிறகு என்ன ,எதாவது செய்யலாம் என்ற எண்ணம் தோன்றவே தூக்கம் என்பது முதலில் நினைவுக்கு வந்தது. அனால், அதுவே மிக பெரிய சலிப்பை ஏற்படுத்தியது, சும்மா இருக்கவும் மனம் விரும்பவில்லை.


புத்தகம் வைத்திருக்கும் அலமாரியிடம் சென்றேன்.அங்கு வைத்திருந்த புத்தகங்களை புரட்டினேன் .அந்த சலிப்பு சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் புத்தகத்தை தேடினேன். எனக்கு புத்தகம் படிக்க மிக்க பிரியம். ஒரு புத்தகத்தை பார்த்தவுடன் கண்கள் தூண்டில் போட்டது.எத்தனை முறை படித்தாலும் திரும்பவும் கைகள் தீண்ட ஏங்கும்,இளைஞர்களின் எழுச்சியை உந்து படுத்திய 'அக்னிச்சிறகுகள் '.


   தனித்து இருந்த காலத்தில் முற்றும் மாறுபட்ட நிலையை பெற்றுயிருந்தேன் .மன குழப்பமும் ,கட்டுக்குள் அடங்காத எண்ண ஓட்டமும் சற்று என்னை மனசோர்வு அடைய வைத்திருந்தது. புத்தகத்தை வாசிக்க தொடங்கி ஒரு நூறு தாள்கள் கடந்து இருக்கும். முன்னர் படித்த போது இல்லாத பல கோணங்கள் கண்களுக்கு புலப்பட்டன.


அப்போது தோன்றிய சிந்தனைகள் சற்று விசித்திரமானவை. ஒவ்வொரு வரிகளிலும் தாக்கத்தை உணர்ந்தேன். இதுவரையில் ஆழ்மனது தொடர்புடன் நான் படிக்கவில்லை என்ற எண்ணம் என்னைச் சூழ்ந்தது. அதில் ஒரு சில வரிகள் என்னை ஈர்த்துவிட்டனவா அல்லது உண்மை நிலையை நான் உணர்ந்து கொண்டேனா என தெரியவில்லை . அப்துல் கலாம் ஐயா ஒரு மகான் என்பதில் யாது ஒரு ஐயமும் இல்லை.


  அந்த சில தாள்களில் , என்னை ஈர்த்த கருத்துக்களை என் பார்வையில் நேயர்களுடன் பகிர விரும்புகிறேன் .தலைவன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என அனைவரும் வெவ்வேறு கருத்துக்களை முன் நிறுத்துவோம் .சரியான விளக்கத்தை கலாம் ஐயாவின் கூற்று உறுதி படுத்துகிறது."விசித்திரமான ஒருவன் தனது விசித்திரத்தை கொண்டு சமுதாயத்தை மாற்ற முடியும் என உத்வேகம் கொண்டு உழைப்பினால் தலைவன் ஆகிறான்." ஆனால், அவன் அங்கு முழுமையடையவில்லை,காரணம் தன்னுடன் அன்றாடம் பணியாற்றுபவர்கள் உடனோ, சக மனிதர்களிடமோ எதாவது ஒரு நிலையில் தலைமையை உணர தவருகிறான்.


எப்போது மற்றவரிடம் தலைவன் இருக்கிறான் என்பது தெரிய வருகிறதோ அன்று அவன் முழுமையான தலைவன் என்ற நிலையை அடைகிறான் .இந்த கருத்துக்கள் என்னை ஆட்கொண்டு விட்டது என்றுதான் கூற வேண்டும் . தனிமையானது பல சமயங்களில் சிறந்த பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது என்பது திண்ணம் .


Rate this content
Log in

Similar tamil story from Abstract