Subha s

Romance

3.8  

Subha s

Romance

யாரும்மில்லா கடற்கரை 🌅🌅💧🌈

யாரும்மில்லா கடற்கரை 🌅🌅💧🌈

2 mins
36


"யாருமில்லா கடற்கரையில் நீயும், நானும் மட்டும் இருக்கணும்டா" என்று சொல்லிக் கொண்டு இருக்க அம்மாவின் அழைப்பு வந்தது. "சரி இனியா நா அப்புறம் பேசுறேன்" என்று சொல்லி இனியன் போன் கால் ஐ துண்டித்தான்.

"என்னம்மா, எதுக்கு கூப்டுறானு" கேட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தான். என்ன டா என்ன பன்னிட்டு இருந்த நான் டின்னர் பண்ண லேட் ஆச்சுன்னா அப்டி கத்துவ இப்போ இன்னும் கிளம்பாம இருக்க? என்று கேட்டுக்கொண்டே மதிய உணவு எடுத்து வைத்தாள்.

"இல்லாம்மா .... இனியா பேசிட்டு இருந்த" அதான்.

"அப்படியா சரி சாப்ட தோசை வைத்தாள். இனியனின் எண்ணம் முழுதும் அவள் மேல் இருந்தது (அப்டி சொல்றத விட கடலின் மேல் இருந்தது)... கடலை அவள் வர்ணித்தவிதம் இவ்ளோ அழகா என்ற எண்ணத்தை அவன் மனதில் விதைத்தாள் ...,

"கடல் எப்போதும் ஓடி பிடித்து விளையாடும்,  

நம்மை ஓடி பிடிக்க வரும், 

நுரையை தள்ளுவதை போல் வந்து  நம்மை பிடித்து விடும். 

அதில் இருந்து வரும் குளிர்ந்த காற்று நம்மை கட்டி இழுக்கும், 

நம் பாததடயத்தை👣👣 காக்க இயலாது தவிப்போம், 

அதன் விரிந்த கண்கள் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கும், 

என்னவனுடன் யாரும் இல்லா கடலை ரசிக்க ஆசை தான் பேராசை தான்..... "

இனியா சொன்ன இந்த வார்த்தைகள் அவன் மனதில் பதிந்தது. அவள் நம்மை விட கடலை காதலிக்கிறாளோ?" என்று செல்லக் கோபப்பட்டான் அவள் மேல்....

டிவியில் சன் மியூசிக் ஓடிக்கொண்டு இருந்தது அங்கும் கடல் பட பாடல் ஒளிபரப்பாகியது,

"மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் பௌர்ணமி இரவு கடல் கரை ஓரம் (பனி விழும் காடு என்பது இவன் காதில் வேறுமாதிரி ஒலித்தது)

 ஒத்தையடி பாத உன் கூட பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் நீ போதுமே".     என்ன எங்க போனாலும் கடலை பற்றிய எண்ணமே வருகிறது என்று எண்ணியவன்.....


அந்த கடல் காற்று அவனையும் இழுக்க தொடங்கியது. யாராலும் தப்பிக்க முடியாது கடலின் காதலில் இருந்து. நேரம் ஆக ஆபீஸ் கிளம்பினான்.

போகும் வழியில் அவனையும் அறியாமல் கார் ஈ சி ஆர் பக்கம் திரும்பியது.

"சில்ல்லுனு" காற்று அவன் முகத்தில் அறைந்து இத்துணை நாள் ஏன் பார்க்கவில்லை, என்று கேட்பது போல் இருந்தது.      

"கரையில் உள்ள படகை வந்து தொட்டு சென்றது அலை,

நீ தனியாக இல்லை நான் இருக்கிறேன் என்று சொல்வதை போல"

"அடியே கடல் காதலியே உன்னை எப்படி பார்க்காமல் விட்டேன்,


உன்னை கடந்து தினமும் சென்றேன்,

ஏன்? உன் சுவாசத்தை என் முன் விடவில்லை,

உன் " இதழ் ஓரம் உள்ள நீர் துளியை" துடைப்பதை போல,

உன் அலையை என் மேல் அடிக்க பார்க்கிறாய் கள்ளியடி நீ,

     என் காலில் கிச்சு கிச்சு மூட்டிக்கிறாய்." அங்கே நின்று ஒரு selfi எடுத்து விட்டு கிளம்பினான் மனம்மிற்றி.., போட்டோவை அப்லோட் செய்து "என் இதயத்தை கரைத்தவள்" என்று எழுதி அனுப்பினான். **இவன் நேரம் பின்னால் ஒரு பெண் இருப்பதை பார்க்க தவறினான் **. ஓஓ.... இவதான் உன் மனம் திருடியவளா.. இனியாவிடம் இருந்து குறுந்செய்தி. "" இதுவும் உன் வேலை தான என கடலை பார்க்க...🙄🙄

கடலோ நான் அறியேன் என்பதை போல் வானத்தை பார்த்தது..... ""🙃🙃

        **வாழ்க வளமுடன் **


Rate this content
Log in

Similar tamil story from Romance