STORYMIRROR

anuradha nazeer

Classics

3  

anuradha nazeer

Classics

யாசகம்

யாசகம்

1 min
196

காயத்ரி மந்திரம் உச்சரித்தால் எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்? 

 ஒரு முறை அக்பர் மாளிகையில் தினமும் யாசகம் கேட்டு வந்த ஒரு பெரியவரை மகான் கோலத்தில் மன்னர் அக்பர் கண்டு வியந்தார். என்னடா இது? சில நாட்களுக்கு முன்பு வரை நம்மிடம் பிச்சை கேட்டு வாழ்ந்து வந்த இந்த முதியவரை இன்று மகான் என்று மக்கள் கொண்டாடுகிறார்களே எப்படி இது நிகழ்ந்தது என்று சிந்தித்து கொண்டு இருந்தார். கூட்டம் கலைந்து அந்த முதியவரிடமே சென்று கேட்டும் விட்டார் அக்பர். அதற்கு அந்த பெரியவர் அருகில் நின்று கொண்டிருந்த பீர்பாலை சுட்டி காட்டி மன்னர் பெருமானே பீர்பால் தான் என்னை காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் அதிக பணம் தருகிறேன் என்று கூறினார். நானும் பணம் கிடைக்கிறதே என்று அவர் கோரியவாறு உச்சரித்து வந்தேன். ஆனால் என்னை அறியாமல் என் உடலில் புது வித மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். பின்னர் பக்தி சிரத்தையுடன் கூறி வந்தேன். அதனால் உள்ளம் சக்தி பெறுவதை கண்டேன். இந்த சக்தியால் தான் இன்று மக்களுக்கு என்னால் அருள்வாக்கு கூற முடிகிறது. தீரா பிணி தீர ஆசி வழங்குகிறேன் என்றார்.சாதாரண மனிதனையும் தெய்வீக சக்தி பெற்ற மனிதராக மாற்றிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். உடனே அனைவரும் கோடீஸ்வரனாக மாறி விட முடியுமா என்று கேட்கலாம். நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் உச்சரித்து வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். 


Rate this content
Log in

Similar tamil story from Classics