விருது
விருது


ஐடி துறையில் காலாண்டிற்கு ஒருமுறையாவது சிறந்த ஊழியர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். பல்வேறு பிரிவுகளில் இந்த விருது பலருக்குக் கிடைக்கும். ஒருமுறை இப்படி விருது வழங்குகையில் என் அணியிலிருந்த அனைவருக்கும் விருது கிடைத்தது என்னைத் தவிர்த்து. திடீரென மனதில் கோபமும் கவலையும் எழுந்தது இயல்பாக. சண்டையிட வேண்டும் எனத் தோன்றியது. சற்று அமைதியாக யோசித்தேன், ஞானம் பிறந்தது.
மற்றவர்கள் நமக்கு விருது அளிப்பதை முடிவு செய்வதைவிட நம் மனதிற்கு நன்றாகத் தெரியும் நாம் அந்த விருது பெரும் அளவிற்கு உழைத்து இருக்கிறோமா இல்லையா என்று. அந்த விருது பெருமளவிற்கு நாம் உழைக்கவில்லை என்று நம் மனம் அறிந்தால் ஏன் கோபம் கொள்ள வேண்டும். அந்த விருது பெருமளவிற்கு நாம் உழைக்கத் தொடங்க வேண்டும். அந்த விருது பெறும் அளவிற்கு நாம் உழைத்திருந்து தரவில்லை என்றாலும் நம் மனதிற்குத் தெரியும் நாம் நம்முடைய முழு உழைப்பையும் வழங்கியிருக்கிறோம் என்று பிறகு ஏன் கவலை கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் விருதுகளை விட முக்கியம் நம் மனமே. எந்த நிலையிலும் உண்மையை அது அறியும். அதற்கு நாம் உண்மையாக இருப்போம். இதைப் புரிந்து நடப்பவருக்கு வாழ்வில் துன்பம் நிகழாது என்ற உண்மையை உணர்ந்தேன்.