anuradha nazeer

Classics Inspirational

4.8  

anuradha nazeer

Classics Inspirational

வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்

வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்

2 mins
217


சிவாஜி நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நற்காரியங்களில் சில உதாரணங்கள். ( வெளிச்சத்திற்கு வராத மறந்து விட்ட , மறைக்கப்பட்ட உண்மைகள். இதை உலகமும் இன்றைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு ) காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கினார்.மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் சிவாஜி நன்கொடையாக வழங்கினார். அத்தொகையின் தற்போதைய பணமதிப்பு நகர்புற நில மனை மதிப்புப்படி ரூபாய் 25 கோடிக்கும் மேல். சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ.... "பள்ளியில் மாணவர்கள் பகலுண வுண்ணும் வண்ணம் அன்று ஓர் இலக்கம் ஈந்த அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளினம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில் உள்ளதோர் தொழிற்பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார் இன்றீந்த வெண்பொற் காசுகளோ இரண்டரை இலக்கமாகும் நன்றிந்த உலகு மெச்சும் நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற குன்றொத்த பெருஞ் செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் எந்தெந்த நடிகர் செய்தார் ? இப்புகழ் யாவர் பெற்றார்?" புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


தவிர அவரது மனைவி கமலா அம்மாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் பாகிஸ்தான் யுத்த நிதியாக 400 சவரன் தங்க நகைகளையும் வழங்கினார். சிவாஜி 100 சவரன் தங்க பேனாவை நன்கொடையாக வழங்கினார். கொய்னா ( மகாராஷ்டிரா) பூகம்ப நிதியாக ரூ25 ஆயிரம் (இன்றைய பணமதிப்பு ரூ1.78 கோடி) வழங்கினார். பூனாவில் வீரசிவாஜிக்கு சிலையும், உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது மெரீனா கடற்கரையில் திருவள்ளுவருக்கு சிலையும் நிறுவினார். தவிர கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை சிவாஜி நிறுவினார். அச்சிலையை 16-07-1970 அன்று திரு. நீலம் சஞ்சீவரெட்டி எம்.பி தலைமையில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் எம்.பி திறந்து வைத்தார். சிவாஜி இந் நினை விடத்தை சில வருடங்கள் பரா மரித்து பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். (இந்நினைவிடத்திலேயே தமிழக அரசும் மணிமண்டபம் கட்டியது. அதை 18-05- 2015அன்று முதல்வர் திறந்து வைத்தார்) இந் நினைவிடத்தின் மதிப்பு தற்போது பல கோடிகள் பெறும். சிவாஜி என்ன செய்தார் என்போருக்கு மேற்கண்ட சிலைகளின் பீடங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களே பதில் கூறும். இதை மறுக்கவோ , மறைக்கவோ முடியாது. தமிழகத்தில் புயல்,மழை வெள்ளம் வந்த போது உணவு பொட்டலங்கள் வழங்கியதுடன் நாடகம் நடத்தி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது தவிர நிறைய நிதி உதவிகளை விளம்பரம் இன்றி செய்துள்ளார்


Rate this content
Log in

Similar tamil story from Classics