வாழ்வியல் நெறி
வாழ்வியல் நெறி
"ரேணு எந்திரி ஸ்கூல் கெளம்பு" கிருத்திகாவின் குரல் கம்பீரமாக ஒலித்தது. கிருத்திகாவின் ஒரே மகள் ரேணுகா. கிருத்திகா தனியார் பள்ளி ஆசிரியை. ரேணுகா அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி. ரேணுவிற்கு தந்தை இல்லை.
ரேணு படிப்பில் சுமார். ஆர்வம் காட்டாதவள். திடீரென கொரோனா எனும் விஷக்கிருமி பரவுதலைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ரேணு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவளுக்கு இணையதள வகுப்புக்காக கைபேசி வாங்கித் தரப்பட்டது. ஒரு மாதம் வரை புது அலைபேசியில் விளையாடுவது, பாடல் கேட்பது என்று பொழுது போக்கினாள்.
ஒரு முறை ஏதேச்சையாக ஒரு மாணவியின் உரையைக் கேட்டாள். அந்த மாணவி ஒரு உலக சாதனையாளர். தன் சாதனையை பற்றி அவள் பட்ட கஷ்டத்தினையும் அவள் பெற்றவர்கள் பட்ட கஷ்டத்தினையும் அழுது கொண்டே எடுத்துக் கூறினாள்.
அவளை அனைவரும் பாராட்டுவதைப் பார்த்ததும் ரேணுவிற்கும் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அலைபேசியின் மூலம் அனைத்து புது நுட்பங்களையும் கற்றுக்கொண்டாள். சிறு சிறு போட்டிகள், கருத்தரங்குகள் என்று அவள் நிறைய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றாள். இறுதியாக அவள் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி சேவை செய்தாள்.
அவளின் சிறுவயதிலேயே சேவை மனப்பான்மையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் செய்யப்பட்ட சாதனைகளையும் பாராட்டி அரசு விருது வழங்கி சிறப்பித்தது.அப்போது ரேணு, "வாழ்வில் முன்னேற முயற்சி வேண்டும். திடீரென ஆங்கிலம் தெரியாத ஒருவரை அயல்நாட்டில் கொண்டு விட்டால் வேறு வழி இல்லாமல் கற்றுக்கொள்வார். அது போல மாணவிகளுக்கு சாதனை அவசியம் அத்தியாவசியம் என்ற நிலை வர வேண்டும் என்று கூறினாள். கைதட்டல் ஒலி குறையவில்லை.
