STORYMIRROR

POORNIMA S

Children Stories Tragedy Inspirational

4  

POORNIMA S

Children Stories Tragedy Inspirational

மனித மிருகம்- பொறாமை

மனித மிருகம்- பொறாமை

3 mins
166

ஒரு சர்க்கஸ் கூடத்தில் கஜா என்ற சிங்கமும் ராஜா என்ற புலியும் வாழ்ந்து வந்தன. கஜாவின் பாதுகாப்பாளர் பெயர் கண்ணன். ராஜாவின் பாதுகாவலர் மூர்த்தி. புலி (ராஜா) சிறு குட்டியாக இருந்ததில் இருந்து அதைப் பாதுகாப்பது மூர்த்தி. இருவரும் சகோதரர்கள் போல அன்புடன் பழகுபவர்கள். சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது, மேலும் மூர்த்தியின் அனைத்து கட்டளைகளுக்கும் ராஜா அடிபணிவான்.


பொதுவாகவே காட்டு விலங்குகள் அவ்வளவு எளிதில் மனிதர்களிடம் பழகுவது இல்லை. அப்படியே பழகினாலும் அந்த நெருக்கம் நீண்ட காலம் நிலைப்பதில்லை. வீட்டு விலங்குகளிடம் இருக்கும் அன்பு காட்டு விலங்குகளிடம் இருப்பதில்லை. ஏனெனில் காட்டில் அவை மனிதர்களால் வேட்டையாடப்படுதல் மற்றும் மனிதர்களை இரைக்காக விலங்குகள் வேட்டையாடுதல் என மாறி மாறி நடந்து கொண்டுள்ளது.


இந்நிலையில் மிருகங்கள் மனிதர்களிடம் நெருங்க பயப்படும். மேலும் விலங்குகளுக்கும் மனிதர்கள் தங்களை துன்புறுத்தி விடுவார்களோ என்று பயம் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜா-மூர்த்தி யின் இவளவு நெருக்கமான பிணைப்பு அனைவருக்கும் ஆச்சர்யத்தைத் தரவல்லது. சர்க்கஸ் கூடத்தின் முதலாளி மற்றும் அனைவரும் மூர்த்தியை பாராட்டுவர்.மேலும் கஜாவும் கண்ணனும் அவ்வளவு நெருக்கத்திற்குரியவர்கள் அல்ல.அதனால் மூர்த்தி மேல் கண்ணனுக்கு பொறாமையும் உண்டு.


ஒவ்வொரு நாளும் சர்க்கஸின் போது ராஜாவின் ஒவ்வொரு புது புது விளையாட்டுகளை, சாகசங்களை அனைவரும் ரசித்து பாராட்டினர். மூர்த்தி கத்துக்கொடுக்கும் அனைத்து விளையாட்டுக்களையும் ஆர்வமுடன் கற்று அனைவரின் முன்பும் அதை திறம்பட விளையாடி மூர்த்திக்கு சிறப்பு சேர்ப்பான் ராஜா. கண்ணனின் கண்டிப்பான அணுகுமுறையினால் கஜா எந்த விளையாட்டிலும் ஆர்வமுடன் பங்கேற்பதில்லை. இதனால் கண்ணனுக்கு கெட்ட பெயர். 


ஒருமுறை உணவு இடைவேளையின் போது கண்ணன் கஜாவுக்கு இறைச்சியைத் தட்டில் வைத்து தூரமாய் நின்று கொடுக்கிறான். ஆனால் மூர்த்தியோ ராஜாவிற்கு ஊட்டி விடுகிறான்.மூர்த்தியின் அருகில் வந்த கண்ணன், "என்ன மூர்த்தி எப்போது பார்த்தாலும் உன் ராஜா ராஜா என்று அனைவரும் புகழாரம் சூட்டுகிறார்கள் ஆனால் என்னால் ராஜாவின் திறமையை சரிவர யூகிக்க முடியவில்லை" என்று கூறினான்.மூர்த்தி இதை கேட்டு அதிர்ந்து "ஏன் ராஜாவிற்கு திறமை இல்லை என்று நினைக்கிறாயா" என்று கோபமாகக் கேட்கிறான்.


கண்ணனோ, "இல்லையில்லை உன் ராஜா சிறந்தவன் தான் ஆனால் அதை ஒரு செயலின் மூலம் நிரூபித்தால் உங்கள் இருவரின் திறமைக்கும் நான் அடிமையாகி விடுவேன்" என்று கூறினான். "என்ன செயல் அது. தயங்காமல் சொல்.என் கட்டளையை என்றுமே ராஜா மீற மாட்டான்" என்று செருக்கோடு மூர்த்தி கூறினான். உடனே கண்ணன்,"அது ஒன்றும் மிகக்கடினமானது இல்லை. புலியின் தலைக்குள் வாயை விட்டு பின் வெளியே எடுப்பது பற்றி நிறைய கதை படித்திருக்கிறேன். அது மாதிரி உன் ராஜாவிடம் உன்னிடம் செய்து காட்ட முடியுமா?" என்று ஒரு சிரிப்போடு கேட்டான்.


மூர்த்தி சற்றும் யோசிக்காமல், "இதிலென்ன கடினம் இதோ இப்போதே செய்து காட்டுவோம் என்று கூறி ராஜாவை பார்த்து, "ராஜா அருகில் வா" என்று அழைத்தான். புலி அருகில் வந்தது. "உன் வாயைத் திற" என்று கூறினான்.வாயைத் திறந்தது. மூர்த்தி தன் தலையை புலியின் வாய்க்குள் விட முயற்சித்தான். உடனே அந்த செய்கையை வேண்டாம் என்பது போல புலி தன் தலையை வேறு புறமாகத் திருப்பிக்கொண்டது. இதைப்பார்த்த கண்ணனோ கேலி செய்து சிரித்தான். மூர்த்திக்கு ராஜாவின் மீது கடுங்கோபம். கண்ணனோ "இதுதான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னதான் பாசம் கொட்டி வளர்த்தாலும் மிருகம் வேறு மனிதன் வேறு என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு சென்றான். 


மூர்த்தி மறுபடியும் அதே போல் வாய்க்குள் தலையை விட முயற்சித்தான். ஆனால் புலி அந்த செய்கையை அனுமதிக்கவில்லை. கோபத்தில் "இனிமேல் என் முகத்தில் முழிக்காதே" என்று கூறிவிட்டு சென்றான். ஏழு நாட்கள் கடந்தன. ராஜாவை மூர்த்தி பார்க்கவே இல்லை. ராஜாவும் உணவு உண்ணாமல் வருத்தத்துடன் படுத்தே இருந்தது. 


அன்று சர்க்கஸ் தினம். அன்றைய நாள் கஜாவிற்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தைகள் "கஜா" "கஜா" என்று கரவொலி எழுப்பி கைதட்டி குரல் குடுக்க இங்கும் அங்கும் ஓடியது. நெருப்பு வளையம் தாண்டியது. அனைவரும் கஜாவைப் பற்றி பெருமையாகப் பேச கண்ணனுக்கோ மகிழ்ச்சி. மூர்த்தியினால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சற்றும் யாரும் எதிர்பாரா வண்ணம் சிரிக்ஸ் மேடையின் நடுவில் பொய் நின்று "ராஜா" என்று கத்தி அழைத்தான். அவன் குரல் கேட்டதும் புலி பாய்ந்து ஓடி வந்தது. "ராஜா அருகில் வா" என்றான். வந்தது. "வாயைத் திற" என்றான். இவ்வளவு நாள் சாப்பிடாமலே இருந்ததால் மூர்த்தி உணவு குடுப்பான் என்று ஆசையாக வாயை அகலத் திறந்தது. 


யாரும் எதிர்பாராவண்ணம் திடீரெனெ தன் தலையை புலியின் வாய்க்குள் விட்டான். விபரீதத்தை அறியாத புலி வாயை மூட முயற்சி செய்ய, புலியின் பற்களுக்கு இடையே மூர்த்தி தலை நசுங்கி இறந்தான். தன்னால் தன்மேல் உயிரையே வைத்திருந்த மூர்த்தி இறந்ததை உணர்ந்த அந்த புலி அந்த நொடியே மண்டியிட்டு உயிரை விட்டது. இதையெல்லாம் பார்த்த கண்ணன் அழுது வடித்தான். சர்க்கஸ் கூடமே இரங்கலில் மூழ்கியது. கண்ணனின் பொறாமைக்குணம் அவனை மிருகமாக்கி கண்ணனின் உயிர் போக காரணமானது. அதே நேரம் மிருகமாகிய ஒரு புலியின் மனிதநேயம் தன்னால் தன் பாதுகாப்பாளர் உயிர் போனதறிந்து அடுத்த நொடி தனது உயிரைத் தியாகம் செய்தது.


Rate this content
Log in