STORYMIRROR

punitha christina

Inspirational Others

4  

punitha christina

Inspirational Others

ஊரடங்கு உணர்த்தும் உண்மைகள்

ஊரடங்கு உணர்த்தும் உண்மைகள்

1 min
436


ஊரடங்கு உணர்த்தும் உண்மைகள்

             பகுதி - 1   

மனிதன் ஒரு சமூகப் பிராணி. இந்த கூற்று நம்மில் அநேகர் அறிந்த ஒன்றே. ஆனால் நாம் வாழும் இந்த பரபரப்பான உலகில் நமக்கேது நேரம்!!! சிந்திக்க வேண்டிய செய்தி தான்...


எப்போதும் எவ்வேளையும் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் பார்க்க நேரமுண்டு. ஆனால் குடும்பத்துடன் கொஞ்சி விளையாட நேரமில்லை. கேள்வி கேட்டால் வரும் பதில் என்ன தெரியுமா? " ஐ ஆம் சோ பிசி". நூற்றுக்கு தொண்றொன்பது பேர் சொல்லும் பதில் இது தான்.


மானங்கெட்ட மானிடா!

மூதாதையர் சொல் மதியாத உன்னை கொரோனா என்னும் எமனின் ஏவுகணை அடிபணியச் செய்து விட்டது. ஊரையேச் சுற்றி வந்த உன்னை வீட்டில் அடையச் செய்து உன் குடும்பத்துடன் சு ற்றத்துடன் நேரம் செலவிட உதவியப் பெருமை ஊரங்கடையேச் சாரும்.


கற்றுக் கொண்டப் பாடத்தைக் காலத்துக்கும் மறக்காதே! மறுபடியும் உன் மதிகேட்டுக்குத் திரும்பாதே! முகநூலில் முந்நூறு நண்பர்களைச் சம்பாதிப்பதை விட உன் வீட்டில் இருக்கும் மூவருடன் உன் நேரத்தைச் செலவிடு. உன் ஆயுள்நாளை ஆனந்தமாய்க் கழித்திடு👍

மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்☺️ 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational