punitha christina

Inspirational

3.3  

punitha christina

Inspirational

ஊரடங்கு உணர்த்தும் உண்மைகள் - பகுதி 2

ஊரடங்கு உணர்த்தும் உண்மைகள் - பகுதி 2

1 min
327



  பகுதி - 2


"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து." இந்த பொன்மொழியை நம்மில் பலர் அறிந்திருப்பினும் நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. காரணம் கடினமாயிற்றே! 


வீடு முழுவதும் வேண்டாத பொருட்கள் ஏராளம் ஏராளம். பாழாய்ப் போனக் கவுரவத்தைக் காக்க எல்லாமே கடனில் வாங்கியது. ஊரடங்கில் வீட்டில் ஒடுங்கியிருக்கும் போது தான் உரைக்கிறது உண்மை. வருமானம் குறைந்து வாழவே வழி இல்லாத போது ஆடம்பரமான அழகு சேர்க்கும் பொருட்கள் எதற்கு?


வருமானத்தில் பாதி கடன் பெற்ற பொருட்களின் வியாபார நிறுவனத்துக்கேச் சென்று விடுகிறது. இயற்கையோடு இணைந்து எளிமையாய் வாழ வேண்டிய மனிதன் செயற்கையாய் மாறிச் சின்னாபின்னாமாகி விட்டான். இதை சிந்திக்க வைத்தப் பெருமை ஊரடங்குக் காரணமான கொரோனாவையேச் சாரும்.


மரம் வளர்த்து இயற்கையானக் காற்றைச் சுவாசிப்பதற்குப் பதிலாக கடனில் வாங்கிய ஏசியில் உல்லாசமான உறக்கம். விளைவு... எகிறிய மின்கட்டணம்! இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


😷ஊரடங்கு நமக்கு உணர்த்தும் உண்மை. இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழ்வது. ஆடம்பரமான வேண்டாதப் பொருட்களைக் கடனில் வாங்குவதைத் தவிர்த்து இயற்கையோடு இணைந்து இன்பமாய் வாழ்வது.

அடுத்த பாகத்தில் மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்!


Rate this content
Log in

Similar tamil story from Inspirational