Kumar Swaminathan

Romance

4  

Kumar Swaminathan

Romance

தனியே! தன்னந்தனியே!

தனியே! தன்னந்தனியே!

5 mins
545


நெஜம்மா கவனிக்கல வினயா.

“அந்தக் கதையெல்லாம் வேணாம். உன் பக்கத்துல நின்னுண்டிருந்துதே அந்த ஜொள்ளு சுந்தரம் - அது கூட உங்கிட்ட கண்ணை காமிச்சு ‘ஒன் ஆளு வந்திட்ச்சு’ன்னுகண்ணை உசத்தி உசத்தி காண்பிச்சுதே. நான் கவனிக்கலைன்னு நினைச்சியா?”

சரி விடு . இப்பத்தான் கிளம்பிட்டேன் இல்ல!

உங்களுக்கு இஷ்டமில்லாட்டாலும் என்னைப் பத்தி நிச்சயமா தெரிஞ்சுக்கணும் நீங்க. 

28. அது என் வயசு. பேர்- கிருபாசங்கர். Last name எழுத நேரமில்லை. அவசியமும் இல்லை. எதுக்கு உங்களுக்கு? visa குடுக்கப் போறீங்களா? தேவையில்லை. நான் இங்கேயே உழைச்சு இந்தியாவை 2030 ல உலகத்துலயே முதன்மையான நாடா ஆக்க உழைக்கப் போறேன். ....

சரி. சரி. உங்களுக்கு வினயா பத்தி தெரியணும் அவ்வளவு தானே?

வினயா! அப்பா பேரு ஜானகிராமன். என் கூட வேலை பாக்கறவ. 32. இது அவ வயசில்ல. போன birthday cake வெட்டறச்ச மேல 29ன்னு நம்பர் சொருகி வெச்சுருந்தாங்க. இப்ப அவளைப் பாக்கறேன். ரெண்டு நம்பருமே சரியாத்தான் இருக்கணும்!

இப்ப அலுவலகம் பூரா சுத்திப் பாக்கறேன். எங்க பாத்தாலும் கழுத்து வரைக்கும் வெட்டப்பட்ட முடி. சிலது பின்னல். 40 கள் சிலது கொண்டை. சிலது சும்மா முடிஞ்சிண்டு வந்தது. 50 கள் எல்லாம் கருப்பை விட கருப்பா dye. சில பேர் நரையே நெறைன்னு விட்டுட்டாங்க.

இவங்க எல்லோருக்கும் மத்தியில வினயா தனியாத் தெரிவா. சொன்னபடி கேட்காத சுருட்டை முடி. எண்ணைக்கும் கேட்காது. என்னைக்கும் கேட்காது. அப்படி ஒரு recoil ஆகிற சுருட்டை முடி. அவளோட வட்ட முகத்துக்கும் மாநிறத்துக்கும் அது நன்னா பொருந்தும். 

பொட்டு எட்டுப்பா எட்டுக்கமாட்டா. எட்டுண்டா கவனிச்சியான்னு கேப்பா. எட்டுக்காதச்ச கேட்டா ‘ஏன், பொட்டு எட்டுண்டு பிரத்யேகமா நான் பொண்ணுன்னு பிரகடன படுத்திக்கணுமா’ன்னு கேட்பா.

Gymக்கு போவா போக மாட்டா. yoga பண்ணுவா பண்ண மாட்டா. Dance class போவா போக மாட்டா. கேட்டாலும் கேட்காட்டாலும் ‘என் இஷ்டம்’ னு சொல்லுவா.

இந்த வினயாவை எனக்குப் பிடிச்சிருந்தது. இது எல்லாமே அவளோட தனித்துவம்னு நெனச்சு வியந்தேன். பெண் சுதந்திரம் னு நெனச்சேன்.

ஆமாம் ! இந்தியாவை முன்னேத்தணும்ங்கற வெறி இல்லாதச்ச எல்லாம் அவளை காதலிக்கறேன்.

நாங்க ரெண்டு பேரும் team leads. வெவ்வேற teamsக்கு. தினம் 1 மணி ஆச்சுன்னா என் cubicleக்கு வந்து அவளோட கழுத்துலேருந்து தொங்கற ID யால window glass ல தட்டுவா.

அப்படித்தான் இன்றைக்கு தட்டியிருக்கா. அப்பத்தான் என்னோட project briefing ல கவனம் செலுத்தாம வேடிக்கை பாத்துண்டிருந்திருக்கான் இந்த சுந்தரம். அவளைப் பாத்து வழிஞ்சிருப்பான். தனக்கு break வேணூங்கறதுக்காகவே சிதம்பரம் நடராஜரைத் தொழுது அவளை சீக்கிரம் வர வழைச்சிருப்பான்.

ரெண்டு பேரும் நடந்தோம் canteen நோக்கி. இருக்கற மூணு mess ல Arabic cuisine போலாம்னு சொன்னா. Employees க்கு free lunch தான். வேற ஒண்ணும் இல்ல.

இருக்கற நாலு பெருந்தலைகள்ல ஒண்ணு Google office போய் பாத்துட்டு அதே model ல எங்க கம்பெனிலயும் அதே மாதிரி ஆரம்பிச்சுடுத்து. சாப்பாடு போட்டுட்டாக்க employees மெய்வருத்தம் பாரார் கண்துஞ்சார்னு சொல்லி budgetக்கு approval வாங்கிடுத்து. அதோட plan தான் ஊர் பூரா bus விட்டு employees ஐ திரட்டிண்டு வரது, free யா campus ல சுத்த சைக்கிள் குடுக்கறதுன்னு ஆரம்பிச்சது எல்லாம்.

Arabic cuisine வந்தோம் . Falafal, அந்த chenna paste, Hummus, கத்திரிக்காய் தொகையல் மாதிரி வெள்ளையா ஒண்ணு, dry fruits, fresh fruit juices, freshly baked bread. வெயில் பரவால்லாம இருந்ததால வெளில உட்கார்ந்தோம்.

அப்பத்தான் அந்தப் பேச்சை ஆரம்பி்சேன்.

என்ன வினயா, நம்ப ரெண்டு பேர் projects உம் முடியப் போறது. This would be a good time to plan our future.

“கிருபா! கல்யாணம் பத்தி கேக்கறியா? அதுக்கு என்ன இவ்வளவு diplomacy? கல்யாணம் தான் கட்டி கிட்டு ஓடிப் போலாமான்னு கேக்க வேண்டியது தானே!

You know me. என்னை ஒரு வட்டத்துக்குள்ள அடைச்சுக்க பிடிக்கலை. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு. பல சமயங்கள்ல office னு பாக்காம உன்னை இறுக்கி அணைச்சு முத்தம் குடுக்கணும் போல இருக்கு. இப்பக்கூட அப்படித்தான் இருக்கு. (அவ செருப்புக் காலால என் காலுக்கு முத்தம குடுத்துண்டிருக்கா). ஆனா ஒரு நாளைப் போல உன்னோடயே ஒரு வீட்டுல இருந்துண்டு ஒரே bed room ல படுத்தெழுந்துண்டு, ஒரே அடுப்புல சமைச்சுண்டு, ஒரே table ல உட்கார்ந்து சாப்டுண்டு ங்கற monotony ஐப் பார்த்து பயப்படறேன். I dread that life you know! கல்யாணம்ங்கறது புராண காலத்து concept. Living together ங்கறதே இப்ப hyder காலத்து விஷயமா போச்சு. எனக்கு என்னவோ ஒரு cozy pent house அதுல நான் மட்டும் தனியாங்கறது தான் பிடிச்சிருக்கு. அப்பப்போ எனக்கு நீ வேணும். உன் அரவணைப்பு வேணும். உன்னோட சாப்பிடணும். படுத்துக்கணும். nap எடுத்துக்கணும். ஆனா எப்பவும் உன்னோட இருக்க வேண்டாம்.

என pent house ல என் உலகம். எனக்காக மட்டுமே இயங்கற உலகம். நான் மட்டுமே இயக்கற உலகம். clean ஆ வெச்சுப்பேன் வெச்சுக்க மாட்டேன் ; nightie போட்டுப்பேன் shorts போட்டுப்பேன் jeans போட்டுப்பேன் salwar போட்டுப்பேன் half saree கட்டிப்பேன் புடவை கட்டிப்பேன்

சமைப்பேன் சமைக்க மாட்டேன் food order பண்ணி சாப்பிடுவேன் பட்டினி கிடப்பேன் வீடு பூரா சாப்பிட்ட தட்டும் pizza boxes உம் wine glasses உம் பரவிக் கிடக்கும். இந்த untidiness பொறுக்காம ஒரு cleaning agency க்கு 3000 ருபா குடுத்துட்டு சாவியைக் குடுத்து clean பண்ண சொல்லிட்டு bermuda , tshirt, போட்டுண்டு hand bag சகிதமா ஒரு Gucci glasses ஓட Car எடுத்துண்டு mall க்குப் போய் ஒரு smoothie குடிச்சுட்டு theater போய் ஒரு படத்தை பாத்துட்டு வருவேன். Amazon ல order பண்ணின book ஐ கைல வெச்சுண்டு உட்கார்ந்து Coffee Day லேருந்து வாங்கின coffee ஐ குடிப்பேன். இது எல்லாத்துலயும் என்னன்னு பாத்தேன்னா ஏன், எதுக்கு, இப்படி பண்ணலாமா, அடுத்த வேளைக்கு என்ன ன்னு எந்தக் கேள்வியும் கிடையாது. வம்சம் பெருக ஒரு கல்யாணத்தைப் பண்ணிண்டு ஒரு பேரனோ பேத்தியோ என் கைல பெத்து குடுத்துடுன்னு சொல்ல அப்பாவோ அம்மாவோ இல்ல. பரிபூரண சுதந்திரம். என் உலகம். நான் தான் பிரதானம்.”

இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். மேற்கண்ட சம்பாஷணைகள் நிறைய கேட்டுட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அவ மேல இருந்த காதல் ஈர்ப்பு diminish ஆக ஆரம்பிச்சுது. ‘பெண் சுதந்திரம்’ ங்கறது ஒரு fad னு தோணிப் போச்சு. அவ மேல காதல் போனதும் பெண் சுதந்திரம் ங்கறதுல இருந்த கவர்ச்சியும் போச்சு.

எனக்கு அப்பா இருக்கார். அம்மா இருக்கா. அவங்களுக்கு அவங்க வம்சம் விருத்தியாகணும்.

எனக்கு 2030 ல இந்தியா வல்லரசாணுங்கறதுல ஆர்வம் போயிடுத்து. அதை மோடியும் அமீத்ஷாவும், ரஜினிகாந்தும் பாத்துக்கட்டும்னு விட்டுட்டேன்.

5 வருஷம் ஆயிடுத்து. இப்ப என்னோட last name சொல்றேன்: நடராஜன். ஆமாம் passport வாங்கி visa வாங்கி வெளிநாட்டுல settle ஆயிட்டேன். அங்க lawn ல mickey mouse போட்ட diaper போட்டிடுண்டு ஓடிண்டிருக்கே ஒரு ரெட்டைப்பின்னல் wonder - என் பொண்ணு. அங்க பக்கத்துல ஒரு sweater போட்டுண்டு செடி பூவெல்லாம் ஆராய்ஞ்சுண்டிருக்காளே - என் மனைவி. அவ பேரு வினயா இல்ல.

வினயா, Bandra Pali Hills ல Hrithik Roshan flat க்கு பக்கத்துலயே வேற ஒரு pent house ல இருக்கான்னு கேள்வி. போன வாரம் கூட அவனோட புது பட previewக்கு invite பண்ணியிருந்தானாம். அவ போகலையாம். அவளுக்கு இந்த formal invitation, event, celebrities. எதுவுமே தேவையில்லையாம். அதுக்கு பதிலா Bandra sea shore ல அந்தப் பாறைகள்ல தனியா உட்கார்ந்து அந்த சிலுசிலுப்பையும் மீன் வாடையையும் அனுபவிச்சாப் போறும்னு கிளம்பிட்டாளாம்.

——குமார் சின்னம்பி


Rate this content
Log in

Similar tamil story from Romance