anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

தெய்வ கடாட்சம்

தெய்வ கடாட்சம்

2 mins
194


எந்த வீடாக இருந்தாலும் குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக்கொள்வோம்.


தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். குடியிருப்பது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக்கொள்வோம். 

சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். 

பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சூழலும் அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாக அமைகிறது.

நம்மில் பெரும்பாலானோர் தினமும் பூஜை அறையில் இறைவனை வழிபட்டாலும்கூட, வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைத்திருக்கிறோமா என்பதும், முறைப்படி பூஜைகள் செய்கிறோமா என்பதும் மிகவும் முக்கியம். வீடுகளில் எப்படி பூஜை செய்ய வேண்டும், அதன் முறைகள் என்ன என்பது பற்றி சாஸ்திர நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கே பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம். பூஜை அறையைப் புனிதமான இடமாக பாவிக்கவேண்டுமே தவிர, தேவையற்ற பொருள்களைப் போட்டு வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வ சாந்நித்யத்தைக் குறைத்துவிடும். 

பூஜை அறையை எப்படி வைத்திருக்க வேண்டும்?... எவ்வாறு வழிபட வேண்டும்?

வீட்டின் பூஜை அறை எவ்வாறு இருக்க வேண்டும்?

 எல்லா வீட்டிலும் பூஜை அறை என்பது இன்றியமையாத ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜை அறையை சிறியதாகவோ, பெரியதாகவோ வைத்திருப்பார்கள். பூஜை அறைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம்..!! 

 பூஜையின்போது அரிசி நைவேத்தியம் கண்டிப்பாக இருக்கவேண்டும். இது அனைத்து தெய்வங்களுக்கு உகந்தது. ஏனென்றால் அரிசி இறைவனின் உணவாக கருதப்படுகிறது. அரிசியை தவிர்த்து ஏலக்காயும், வெற்றிலையும் மிக அவசியமாக பூஜை அறையில் வைக்க வேண்டும். 

 பூஜையில் ஏற்றப்படும் விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்காமல் ஸ்திரமாக (ஒரே நிலையில் இருப்பது) எரிவது நல்ல சகுனத்தை தெரிவிப்பதாக அமையும். மலர்கள், தண்ணீர் மற்றும் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது இந்த மூன்றும் பூஜையின் மிக முக்கியமான அம்சங்கள்.

 நாம் அமர்ந்து பூஜை செய்யும் ஆசனத்தையும் மிக புனிதமானதாக கருத வேண்டும். அதை அங்கும், இங்கும் மாற்றி வைக்கக்கூடாது. அதை கால்களால் தள்ளக்கூடாது. மேலும் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றும் போது வீட்டின் வாஸ்து தோஷங்கள் மறையும் என்பது ஐதீகம். 

 மேலும் பூஜை அறையின் சுத்தம் மிக மிக முக்கியமானது, சிலர் எண்ணற்ற தெய்வ படங்களை வைத்திருப்பார்கள். பூஜை அறையில் நிறைய படங்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. 

குறைந்த தெய்வ படங்களை வைத்தாலும் அதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பூஜை அறையில் படங்கள் மட்டும் தான் வைக்க வேண்டுமே தவிர சிலைகளை வைக்கக்கூடாது. 

விளக்கு ஏற்றும் போது அது தெய்வத்திற்கு நேராக இருக்க வேண்டுமே தவிர வேறு திசைகளை நோக்கி இருக்கக்கூடாது. 

சுத்தமான திரியையே விளக்கிற்கு பயன்படுத்த வேண்டும், பூஜை முறைகளை தவறாமல் நடத்த வேண்டும், பூஜையின்போது உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறையில் மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட எந்த பொருளும் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. 

இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். 


ஒவ்வொரு நாள் பூஜை செய்யும்போதும் புதிதாகப் பறித்த மலர்களையே பயன்படுத்த வேண்டும். வாசனைச் சாம்பிராணிகள், ஊதுவத்திகள் ஆகியவற்றை ஏற்றி வைத்த பிறகு பூஜையைத் தொடங்குவது நல்லது. 

பூஜை அறையில் ஏற்றப்படும் அகல் விளக்கு மற்றும் ஊதுவத்திகள் பூஜை செய்யும் நபரின் வலது பக்கமாக இருக்க வேண்டும்.

 பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களைப் பூஜை அறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வேறு இடங்களில் வைக்கக் கூடாது.

 பூஜை அறையில் தேவையற்ற பொருள்களை வைக்கக் கூடாது.

 சிலரது வீடுகளில் படுக்கையறையிலும், சமையலறையிலும் பூஜை அறை இருக்கும்.

பூஜை நடைபெறாத சமயங்களில் அந்த அறையைத் திரையிட்டு மறைத்துவிட வேண்டும்.

 பூஜை அறைச் சுவருக்கு அடுத்தாற்போல் கழிவறையும், குளியலறையும் இருக்கக் கூடாது.

பூஜையின்போது மணியோசை எழுப்புவதும்கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான்.

 மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது. 

தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும்'' 


Rate this content
Log in

Similar tamil story from Classics