தாயுமானவன்
தாயுமானவன்


கழுத்தில் மாலையும் தலையில் அட்சதையும் புது மண தம்பதியர் அமுதாவும் சுந்தரமும் விவேக்க பாத்தாங்க. அமுதா மனசுல ஒரு சின்ன பிளாஷ் பாக். இந்த வயசுல கல்யாணம்னு சொன்னா இந்த சமூகம் என்னை என்னலாம் பேசும்னு தெரிஞ்சு தான் இதெல்லாம் பண்றியா? "அம்மா மத்தவங்கள பத்தி யோசிச்சு நீங்க உங்க வாழ்க்கைல தொலைச்சது எல்லாம் போதும்.
இப்போ எனக்காக நான் சொல்றத கேளுங்க. சுந்தரம் சார் ரொம்ப நல்லவரு.அவரு தான் உங்களுக்கு சரியான துணை". உனக்கு ஏன் விவேக்னு பெயர் வச்சேன்னு தெரியுமா? சொல்றேன் கேளு.தன்னோட காதல் பிரிந்த கதையை சொல்ல ஆரம்பித்தாள் அமுதா. இது சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறன் அமுதா.
நாம பிரிஞ்சுடறது தான் சரி. எனக்கு உன்ன பிடிக்கும் தான் ஆனா என் வீட்ல வர போற மருமகள் நிறைய சீதனம் கொண்டு வரணும்னு எதிர் பாக்குறாங்க. அவங்க பேச்ச மீறினா தற்கொலை பண்ணிடுவேன்னு மெரட்டுறாங்க. என்னால ஒன்னும் பண்ண முடியல. என்ன மன்னிச்சிரு. நான் கிளம்புறேன்.
அவளோட பதிலுக்கு காத்திருக்காம எழுந்து நடந்தான் விவேக். கண்ணீர் தத்தளிச்சுட்டு வரத அடக்கிட்டு அங்கேயே எதோ பிரம்மை பிடிச்சவ போல உக்காந்திருந்தா. யாரோ தோளைக் குலுக்குவது போல உணர்வு. சட்டுனு திரும்பி பார்த்தா அது விவேக். இது போல எத்தனை நாளைக்கு தான்மா இருபது வருஷத்துக்கு முன்னாடி நடந்ததையே நெனச்சிட்ருக்க போற.
மாற்றம் எல்லாரோட வாழ்க்கைலயும் வரும்மா. திருமணத்துக்கு சம்மதம் வாங்கி எல்லா வேலையும் செய்து முடித்தான் விவேக். திருமணமும் முடிந்து இதோ மண மக்கள் மேடையில். தன்னை பெறாவிட்டாலும் பாசத்துல பெற்ற தாயை மிஞ்சிய அமுதா அம்மாவுக்கு தான் சிறந்த பரிசளித்த திருப்தியோட வெளிநாடு புறப்பட்டான் விவேக். தாயுமானவனாய்.....