anuradha nazeer

Classics

4.7  

anuradha nazeer

Classics

தாவரவியல்

தாவரவியல்

1 min
220


ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது.

 மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர்

 அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன.

 மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. 

நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும்.

 சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’.

 கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. 

தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன. 

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது..!!!


Rate this content
Log in

Similar tamil story from Classics