anuradha nazeer

Classics

4.0  

anuradha nazeer

Classics

புறாக்கள்

புறாக்கள்

1 min
225


தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா மூழுவதும் கோயிகள் நிறைந்து காணப்படுகின்றன. பலரின் உழைப்பை வைத்து இறைவனின் அருளைப் பெற அந்த காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் பிரமாண்டத்துடன் மனதை கவரும் விதமாகவும், மனதை சாந்தப்படுத்தி அருளும் வல்லமையுடன் கட்டப்பட்டுள்ளது.


புறாக்கள் ஏன் வளர்க்கப்படுகிறது?

அப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த கோயிகளை பராமரிப்பது மிக எளிதான விஷயம் அல்ல. கோயில் கோபுரங்களில் பல சிற்பங்களுடன் கூடிய கலை நயமிக்கதாக கட்டப்படுகிறது.




அப்பட்டிப்பட்ட கோபுரத்தை பாதுகாக்கும் பொருட்டு புறாக்கள் வளர்க்கப்படுகின்றது. பொதுவாக புறாக்கள் கூடுகட்டி வாழத்தெரியாது என்பதால் கோயில்களில் தஞ்சமடைவது உண்டு.

புறாக்கள் கோயிலில் இருந்தால் சிலந்திகள் கூடு கட்டாது. அதனால் ஒட்டடை ஏற்படாது.



அதோடு வீட்டின் பெரிய பிரச்னையாக இருக்கும் கரையான்கள் கோபுரத்தை தாக்காது. அப்படி கரையான் வந்தால் புறக்களுக்கு இரையாகிவிடும்.

அதே போல் மரங்களை துளையிடும் கரு வண்டுகள் கோயில்களை அண்டாது. அப்படி வந்தா அதுவும் புறாக்களுக்கு விருந்தாகிவிடும்.



கோயில்களில் வவ்வால்கள், ஆந்தைகள் வராது. புறாக்கள் எழுப்பும் சப்தம் இவைகளை விரட்டிவிடும்.

அதோடு புறாக்கள் எழுப்பும் சப்தம் மனிதர்களுக்கு நோயை குணப்படுத்தும் வல்லமை மிக்கது.


இதனால் தான் வெளிநாட்டவர் நம் முன்னோர்களின் அறிவாற்றலை எண்ணி வியக்கின்றனர்.

முன்னோர்கள் கட்டிய இப்படிப்பட்ட கோயில்களை பொக்கிஷமாக காப்பது நமது கடமை.


Rate this content
Log in

Similar tamil story from Classics