Saravanan G

Abstract Romance

4.4  

Saravanan G

Abstract Romance

பசி (அ) உயிர் (அ) மனிதம்

பசி (அ) உயிர் (அ) மனிதம்

4 mins
409


அற்றைத்திங்கள் பொன்னாற்கூடல் ஊர்க்கோடியிலிருந்து நூறடி தூரத்தில் தண்ணீரற்று காய்ந்து அம்மணமாக கிடக்கும் ஓடையை அடுத்த ஒற்றை வீட்டின் வாசலினோரம் கிடக்கும் கல்லின்மீது ஒரு கை சாணி வைத்துக்கொண்டிருக்கையில், காதுகளில் 

நேற்று ஒரு கவிதை படித்தேன். என்று தொடங்கி... 


வீழ்ந்து கிடந்தநல் கோவலன் மார்பினில் வீட்டில் பழுத்த பலா!

அதை ஆழ்ந்து ரசித்தது சாளரத்தின் வழி அன்றைக்கு வந்த நிலா!! 


எப்படி இருக்கு? ஆண்குரல் கேட்டது.


பெரிதாக கண்டுகொள்ளாமல் தன் கையில் ஒட்டியிருந்த சாணியை ஒரு செடியின் இலைகளை பற்றி உருவியவாறு துடைத்து நடந்தான் முத்து.


உதிக்கும் நேரம் உறங்கச்சென்றாள் அழகு.


முத்து பள்ளித்தொடங்கும் நேரம்வரை ஊர் காரைக்களத்தில் காயவைத்திருக்கும் அவர்கள் வீட்டு கள்ளக்காய்க்கு காவலாக காக்கா விரட்டிக்கொண்டிருக்கும்போது, காரைக்களத்தையொட்டி காளி கோவிலின் வெளியே நடப்பட்டிருந்த வேலில் ஒரு எலுமிச்சம்பழமும் கீலே சில காய்ந்த எலுமிச்சைகள் கிடப்பதையும், அதன் அருகில் உறைந்த நிலையில் பரவிக்கிடந்த இரத்தத்தையும் பார்த்துக்கொண்டிருக்கையில், துடும்பு சத்தம் கேட்டு திரும்பும்போது அவன் வகுப்புத்தோழர்கள் சென்றுக்கொண்டிருந்தனர். பள்ளியின் முதல் மணி ஒலித்தது.


வாசற்படியில் குந்தி பை பின்னிக்கொண்டிருந்த அழகைப்பார்த்து அந்த வழியாகச்செல்லும் மைனர் “பை போட எவ்வளவு” என்று நக்கலாக சிரித்துக்கொண்டு கேட்க, கண்களில் ஏதோ சாடைசெய்துவிட்டு எழுந்து உள்ளே சென்றாள். 


மறுநாள் கம்மங்காட்டிற்கு குருவி முடுக்க முத்துவை கூட்டிக்கொண்டு அவன் அம்மா செல்லக்கண்ணு சுடுகாட்டையொட்டி அவர்கள் விவசாயம் செய்யும் காட்டிற்கு சென்றாள்.


நொக்கும் வெயிலில் காய்ந்த தலையுடன் முத்து ஒரு பழைய தகரடப்பாவை குச்சியால் அடித்துக்கொண்டு கம்மங்காட்டை சுற்றிவர வெளிறிய பச்சையும், பூளைப்பூ வெண்மையுமாக இருக்கும் பால்க்கதிர்களை கொத்திக்கொண்டிருந்த படைக்குருவிகள் பறக்க சிறகடிக்கும் சத்தம் முத்துவை பயமுறுத்தியது, ஒருவழியாக காட்டைச்சுற்றி தொடங்கிய இடத்திற்கு வர, மாட்டை அண்ணாந்தால் போட்டுவிட்டு களனித்தண்ணி எடுத்துவர புறப்பட்டாள் செல்லக்கண்ணு.


முத்து ஒரு உணிச்செடியின் அருகே அமர்ந்து அதிலிருக்கும் உணிப்பழங்களை பறித்து, சப்பி விதைகளை துப்பிவிட்டு எழுந்து கம்மங்காட்டின் ஒரு மூலையில் இருக்கும் கருக்கட்டான் மரத்திலேறி பழங்களை பறித்து இருகிளைகளுக்கு நடுவே நின்று கால்ச்சட்டைப்பைகளை நிரப்பிக்கொண்டு இறங்கும்போது சில பழங்கள் கீழேவிழு அவற்றை பொறுக்கிக்கொண்டு நிமிரும்போது, கம்மங்காட்டிற்குள்ளிருந்து ஐந்தடி நீள கட்டுவிரியன் பாம்பு சரசரவென உணிச்செடியைத்தாண்டி சென்றுக்கொண்டிருந்தது, அப்போ முத்துவின் மூக்கிலிருந்து ரத்தம் சொட்டியது. இதயம் வேகமாக துடிக்க ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று தலையை நிமிர்ந்தவரு பார்த்தபடி நடந்தான்.


ஒரு சோளக்காட்டின் பொளியோரம் இருக்கும் பனைமரத்தில் கள்(ளு) இறக்க ஏறியவன், சோளக்காட்டைப்பார்த்து ஓய், ஓய், ஓய் என்று கத்தினான்.


சோளக்காட்டிற்குள்ளிருந்து அழகு வேகவேகமாக வந்து “ஏன் வாலு, வாலுனு கத்ர” என்று கேட்டுவிட்டு நான்கைந்து எட்டு நடந்தவளிடம், வேகமாக ஓடிவந்து


“கொஞ்சம் யாங்கூடா வா கா” என்றான் முத்து


கள் குடிக்க பனைஓலையில் கோட்டை கட்டிக்கொண்டிருந்தவன் “எதுக்குடா?”

 

ஒரு பெரிய பாம்பு இருக்குனு சொன்னான் முத்து.


“ம்ம்ம் கூட்டிக்கிட்டு போ நல்லா பாம்பு புடிப்பாங்க.”


“மூடிக்கிட்டு ஒழுங்கா வேலைய பாரு” என்று சொல்லிவிட்டு முத்துவுடன் நடந்தாள்.


முத்து நடந்ததை வழிநெடுங்கிலும் சொல்லிக்கொண்டே சென்றான். கருக்கட்டான் மரத்திலிருந்து ஐம்பது அடி தூரத்திலிருக்கும் புங்கை மரத்தடியில் ஒரு பாறையில் உட்கார்ந்து கருக்கட்டான் பழங்களை சப்பிக்கொண்டு, பேசிக்கொண்டிருக்கையில்

செல்லக்கண்ணு பையனா இருந்துக்கிட்டு இப்படி பாம்புக்கு பயப்படுற. எங்க சின்ன வயசுல நம்ம ஓடையில் என் அம்மாவும் உன் ஆயாவும் துணித்தொவைப்பாங்க, அப்ப நாங்க மீனுன்னு நெனச்சி தலைப்பிரட்டையை பிடுச்சிட்டு இருந்தப்ப ஒரு சின்னப்பாம்பு வந்துச்சு அத செல்லக்கண்ணு தொரத்துன தொரத்து இன்னும் எனக்கு மறக்கல.


களனித்தண்ணியுடன் செல்லக்கண்ணு வந்தாள்.


“வாடி அழகு என்ன இவ்ளோ தூரம்?”


“பூச்சி வந்துச்சுனு பயந்துக்கிட்டு வந்தான், அதான் நீ வரவரைக்கும்.”


“அது என்ன பண்ணுது, அது பாட்டுக்கு இருக்குது.”


மறுபடியும், பயந்துகொண்டு சற்று விலகி தகரடப்பாவை அடித்துக்கொண்டு சென்றான்.


“அதாண்டி அவங்கூட்டு மருமவ மைனருகூட வாழமாட்டேனு போயிருச்சாமே” என்றாள் அழகு.


“வேட்டி நல்லா வெளுமைய இருக்கு, ஆனா வேலையில எப்படியோ” என்றாள் செல்லக்கண்ணு


அட நீவேறடி, பஞ்சாயத்தே அதுக்குத்தான். ஆளு வெள்ளையாம், ஆனா பூலு சொள்ளையாம்


முத்து வந்தவுடன் வீட்டிற்கு கிளம்பினர். வழியில் ஒரு முக்கட்டித்தடத்தில் சில்லறை காசுகள் கிடப்பதை முத்து பார்த்துக்கொண்டே காலடி நாலடி வைப்பதற்குள் பைசாக்களைக்கணக்கு போட்டுவிட்டான். வீட்டிற்குச்சென்ற சிறிது நேரத்தில் மெல்ல இருட்டத்தொடங்கியது, வேகவேகமாக அந்த முக்கட்டித்தடத்திற்கு வந்து, அந்த பைசாக்களை பொறுக்கிக்கொண்டு ஓடி வேலில் குத்தப்பட்டிருக்கும் எலுமிச்சம்பழத்தை எடுத்துக்கொண்டு எதிரே இருக்கும் பெட்டிக்கடையில் அந்த சில்லறைகளை கொடுத்து முக்கோணவடிவிலான தேங்காய் மிட்டாய் வாங்கி எலுமிச்சையின் கிழிச்சலில் செருகி உள்ளே தள்ளி ஒரு குட்டுச்சுவரில் உட்கார்ந்து ரசித்து சப்பிச்சப்பி சுவைத்துவிட்டு வீட்டிற்குச்சென்று மிகநிம்மதியாக உறங்கினான்.


 இற்றைத் திங்கள் முத்து மரச்சிற்பம் செய்யுமிடத்தில் ஒரு மரத்தருகே உட்கார்ந்திருக்கும்போது.


 ஊர்ப்பெரியவர் "வாண்ணா எப்படி இருக்க? சாப்பிட்டீங்களா? ரொம்ப சோந்தாப்புல தெரியுது பேனாவுல மையெல்லாம் தீந்துப்போச்சா என்று சிரித்துக்கொண்டு கேட்க.


 “சாப்பிட்டேன்” பதிலுக்கு அவரும் சிரித்துவிட்டு ஒரு கட்டையை எடுத்து செதுக்கத்தொடங்கினார்.

  

 செதுக்கிமுடித்த பொம்மையை ஒரு மரத்தில் சாய்த்து வைத்தார்.


அதை பார்த்த ஊர்ப்பெரியவர் அண்ணா என்ன அங்கபோய் பிசுரு உட்டுகிற?


இதைக்கேட்டுக்கொண்டிருந்த முத்து பொம்மையை பார்த்த மறுகணம் கடந்தகால நினைவில் நீந்தி ஒரு தருணத்தில் மூழ்கினான்.


"என்ன கட்டிக்கிறியா?" என்று முத்துவின் காதில்விழ ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த கதவிடுக்கின் வழியாக பார்த்தான்.


“காசில்லையா?” என்று கேட்டுக்கொண்டே படுக்கையில் படுத்து ஒரு கையில் கைப்பேசியில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தவள், சற்றென்று மறுகையை தன் உட்புற தொடையில் வைத்து வரக்கு வரக்குனு சொரிந்தாள்.


 "ஏய் என்ன பன்ற?" என்று கேட்டான்.


“History delete பன்றன்” என்றாள்.

 

அதெப்படி பன்னமுடியும் என்றான்.

 

என்ன தொழில் செய்றவனு நெனச்சியா? பாதி உடல் ஒத்தாசை மட்டுந்தான்னு ஒனக்கு தெரியாதா?

சரி அதஉடு, யா கட்டிக்கிறியானு கேட்ட?


இல்ல சென்னைக்கு போயிருந்தப்ப மெரீனா கடற்கரைக்கு போயிருந்தேன் இருட்டிவிட்டது சோர்ந்து உட்கார்ந்தேன்.


என் அருகில் ஒரு பெண் வந்து நிற்க தலைநிமிர்ந்து பார்த்தேன்.


“வேணுமா” என்று கேட்டாள், ஆனால் எதுவும் வைத்திருக்கவில்லை.


“என்ன?”


முகத்தை பார்த்துக்கொண்டிருந்த கண்கள் கீழாக பார்த்து "செய்யனுமா?"


புரிந்துவிட வேண்டாமென தலையசைத்துவிட்டு எழுந்து நடக்கத்தொடங்கினேன். 

   

“அஞ்சு ரூவா தான்” என்றாள்.


திரும்பாமல் சிறிது தூரம் நடந்துச்சென்று கண்ணகி சிலையின் பின்புறம் தடுப்புச்சுவரில் அமர்ந்துக்கொண்டு மெல்ல இடதுபக்கம் திரும்பி பார்த்தேன் அந்த பெண் ஒரு நபரிடமிருந்து வாங்கி தன் மாராப்புக்குள் சொருகிக்கொண்டிருந்தாள். 

  

பெரும் சங்கடத்தோடும், கனத்த மனதோடும் வலதுபக்கம் திரும்பினேன்.


உயிரற்ற கலங்கரைவிளக்கம் உயிர்ப்புடன் 

கடலில் தத்தளிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்ட

உயிருள்ள நான் அந்த சுவரின் மீது 

வெறும் கூழாங்கல்லாய் மட்டும் 


கண்களில் நீர்கசிந்தவாறு "அவ்வளவு நல்லவனா நீ? இருட்டிலயே வந்துட்டு போறதுனால உனக்கு தெரியல" என்று அழுதுக்கொண்டே ரவிக்கையின் ஊக்கை கழட்ட. நீலவிளக்காய் எரியும் நெடுவெண்ணிலா வெளிச்சத்தில் கண்ணீர் குளத்திலிருந்து இரு கெண்டை மீன்கள் காய்ந்த ஆலிலைவயிறு நோக்கி குதித்தன.


"என்ன இப்படி தடம் பதுஞ்சி இருக்கு" தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.


கூழாங்கல்லை மனசுக்குள்ளியே உருட்டிக்கிட்டிருந்தா யாருக்கும் புரயோசனமில்ல, எடுத்து வெளிய போடு. நீ புத்தனா ஆனாலும் பாதிக்கப்பட்ட யசோதரை இருப்பாள் அதனால மனிதத்தன்மையோட மனுசனா இருந்தா போதும்.


இருவரும் உவத்தனர். இனி நீ மைனர் இல்ல வெறும் மகிழன் தான்.


மழை வரும் போல காற்று பலமாக வீசியதில் காய்ந்துத்தொங்கிய முறிந்த கிளையொன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது.


மழைத்தூரலின் தீண்டலில் நிகழ்காலத்திற்க்கு வந்தான் முத்து. 


மகிழா வா போய் டீ குடிச்சிட்டு வரலாம்னு சகா ஒருவர் அழைத்தார் அந்த சிற்பியை.

**********


Rate this content
Log in

Similar tamil story from Abstract