பாதிக்கப்பட்ட அதிகாரி
பாதிக்கப்பட்ட அதிகாரி


அம்மா! சீனியைப் பாரம்மா! என்னை அடிக்கிறான். என் சடையைப் பிடித்து இழுக்கிறான் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தம்பியைப்பற்றி புகார் கூறினாள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பரிமளா.
டேய் சீனி! அக்காவை ஏண்டா அடித்தாய்?
அம்மா! அவள் தன் தலையில் முதலில் குட்டினாள். அதை அவள் சொல்ல மாட்டாளே?
பரிமளா! நீ ஏன் அவனை குட்டினாய்?
அவன் ஆங்கிலப் பாடம் படிக்கும் போது தவறாகப் படித்தான் அதைத்திருத்தச் சொல்லியும் அவன் திருத்தவில்லை. அதனால் தான் குட்டினேன்.
அம்மா எங்கள் பள்ளியில் சம்பந்தப்பட்ட அதிகாரி என்பதை ஆங்கிலத்தில் Concerned Officer என்று தான் சொல்லிக் கொடுத்தார்கள். அக்கா அது தவறு. அதற்கு பாதிக்கப்பட்ட அதிகாரி என்று பொருள். Officer Concerned என்றால் தான் சம்பந்தப்பட்ட அதிகாரி என்று பொருள் என்கிறாள் என்றான் சீனி.
அம்மா நான் சொல்வது தான் சரி. வேண்டும் என்றால் அவனை ஆங்கில செய்தித
்தாளில் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்க்கச் சொல் என பரிமளா கூறினாள்.
டேய் சீனி அக்கா சொல்லியபடி ஆங்கில செய்தித்தாளில் பார்த்துச் சொல் என அம்மா சொன்னதும் ஆங்கில செய்தித்தாளை எடுத்துப் பார்த்து அம்மா அக்கா சொன்னது சரி தான் அம்மா. இதோ இந்தச் செய்தியில் District Concerned என்று சம்பந்தப்பட்ட மாவட்டம் என்று பொருள்படியும், மற்றொரு இடத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு Concerned District என்றும் போட்டிருக்கிறார்கள் என்றான் சீனி.
சீனி உன் தவறை புரிந்து கொண்டாய் அல்லவா? உன் தவறை திருத்தத்தான் அக்கா குட்டினாள். அவளிடம் மன்னிப்பு கேள்.
பரிமளா உடனே அவன் ஒன்றும் மன்னிப்பு கேட்க வேண்டாம். என் தம்பி தானே. பாடத்தை புரிந்து படித்தால் போதும். இப்போது அவன் புரிந்து கொண்டான்.
சிஸ்டர் ஐயாம் சாரி! என்றான் சீனி.
பரிமளா தம்பியின் கன்னத்தில் செல்லமாக தட்டிக் கொடுத்தாள்.