STORYMIRROR

anuradha nazeer

Classics

3  

anuradha nazeer

Classics

நூல்

நூல்

1 min
188

குஷ்வந்த் சிங், தன் நூலில் ஒரு தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அமெரிக்காவுக்குப் போனபோது, `கறுப்பின மக்களிடம் கவனமாக இருங்கள். ஏமாற்றிவிடுவார்கள்’ என்று யாரோ எச்சரித்திருக்கிறார்கள். அமெரிக்காவில், அவர் பயணம் செய்த கார் ஓட்டுநர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்.


`எங்கே அதிகமாக வாடகை கேட்பாரோ...’ என்ற உறுத்தலோடு பயணம் செய்திருக்கிறார் குஷ்வந்த் சிங். போக வேண்டிய இடம் வந்தவுடன், ‘எவ்வளவு வாடகை தர வேண்டும்?’ என்று அவர் கேட்க, ‘நீங்கள் எங்கள் விருந்தினர். மார்ட்டின் லூதர் கிங்குக்கு வழிகாட்டியான மகாத்மா காந்தி பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு வாகனம் ஓட்டியது என் கௌரவம்’ என்று சொல்லி, வணக்கம் செலுத்திவிட்டு, ஒரு டாலர்கூட வாங்காமல் சென்றிருக்கிறார் அந்த டிரைவர்.



Rate this content
Log in

Similar tamil story from Classics