நண்பர்கள்
நண்பர்கள்


ஒரு ஊரில் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே பார்வைத்திறன் அற்றவர்கள்.
ஆனால் அவர்களுக்கு யானையைப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த நாட்களாக ஆசை.
எனவே தங்களுக்குள் பேசிக்கொண்டு யானையைப் பார்க்க சென்றார்கள்.
பின் ஒவ்வொருவரும் யானையை தொட்டு தொட்டு பார்த்தார்கள்,
ஆசை தீர தொட்டு பார்த்தார்கள்.
ஒருவன் யானையின் கால்களை மட்டுமே தொட்டுப் பார்த்தான்.
அவன் சொன்னான் யானை வீட்டில் இருக்கும் தூண்களைப் போல இருக்கிறது என்றான்.
வேறொருவன் யானையின் காதுகளை மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை வீட்டில் இருக்கும் அரிசி புடைக்கும், தானியம் புடைக்கும் முறம் போல இருக்கிறது. அகலமாக இருக்கிறது என்று கூறினார்.
மூன்றாம் அவனோ யானையின் வாலை மட்டும் பிடித்து பார்த்துவிட்டு அது நெல் குத்தும் உலக்கை போல இருக்கிறது என்று கூறினாள். வேறொருவன் யானையின் தந்தங்களை தொட்டுப் பார்த்துவிட்டு அதுகுழல் விளக்கு போல இருக்கிறது ட்யூப்லைட். வேறு ஒருவனும் யானையின் உடம்பை மட்டும் தொட்டுப் பார்த்துவிட்டு அது ஒரு சிறு குன்று போல் இருக்கிறது .சிறு மலையைப் போல இருக்கிறது என்றான்.
அவரவர் பாணியில் அவர் அவர்களே உணர்ந்து கொண்டது உண்மைதான். அவர்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அலசி ஆராய்ந்து பார்த்தால் இவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்த உருவமே யானை ஆகும்.
அதுபோல்தான் வாழ்க்கையில் அவரவர்கள் அவரவர் கோணங்களிலிருந்து பார்த்து விளக்குவர்.
நாம்தான் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஆனால் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.