anuradha nazeer

Classics

4.7  

anuradha nazeer

Classics

நமக்கு நல்லது

நமக்கு நல்லது

1 min
209


ஒரு சமயம் குரங்கு ஒன்று இருந்தது அதற்கு செர்ரி பழம் என்றால் மிகவும் பிரியம் ஒருநாள் அது அழகான செர்ரி பழத்தை கண்டது உடனே மரத்தை விட்டு இறங்கி எடுத்துப் பார்த்தால் : அது ஒரு சிறிய கண்ணாடி குவளை. அதற்குள் செர்ரிப்பழம். குரங்கு குவளை இல் கையை விட்டது. பழத்தை  பற்றிக்கொண்டதுஆனால் மூடிய கை வெளியே வரவில்லை. உள்ளே போகும் போது நேராக போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே வெளியில் கை கொண்டு வர முடியவில்லை இது ஒரு பொறி, குரங்கை பிடிக்க வேடன் வைத்தபொறி . குரங்கு எப்படி சிந்திக்கும் என்பதை அறிந்தவன்.


குரங்கு போராடுவதை கண்ட வேடன் அங்கே வேகமாய் வந்தவன், குரங்கு குவளை கையில் சிக்கிக் கொண்டதால் வேகமாக ஓடி தப்ப முடியவில்லை ஆனாலும் குரங்கிற்கு ஒரு ஆறுதல். பழம் தன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது என்று.. . அதற்குள் வேடன் குரங்கை அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டு தட்டினான் .அதனால் குரங்கு கை  அதை விட்டு விட்டு வெளியில் வந்து விட்டது. என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கிக் கொண்டது.வேடன் இ டம் கண்ணாடி குவளையும் பழமும் சேதம் ஆகாமல் அப்படியே இருந்தன .குரங்கின் சிந்தனை மன வழி சிந்தனை. கடைசியில் வரும் மரணமே வேடன். ஆசையில் கையை நுழைத்து அகப்பட்டு விடுகின்றோம்: எடுத்துக்கொள்ளுங்கள்.: எடுத்துக் கொண்டால் நமக்கு நல்லது..


Rate this content
Log in

Similar tamil story from Classics