நாராயணீயம்
நாராயணீயம்


பட்டத்திரி வரலாறு : நமது இந்து மதத்தில் நிறைய தெய்வீக நூல்கள் உள்ளன. அதில் ஒரு புகழ்பெற்ற நூல் தான் நாராயணீயம். இதை எழுதியவர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி ஆவார். இவர் கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கிருஷ்ணனின் மேல் பற்றற்ற பக்தியை கொண்ட மஹான் ஆவர். வேத வியாசா பாடியுள்ள ஷீமத் பாகவத பூர்ண காவியத்தை அதே கவிநயத்துடன் சுருக்கப் புனைந்தவர் தான் பட்டத்திரி. இது தான் நாராயணீயம் என்றும் பெயர் பெற்றது. இவர் நிறைய தெய்வீக நூல்கள் இயற்றி இருந்தும் நாராயணீயம் தான் இவருக்கு புகழைத் தேடி தந்தது.
ஷீமத் பாகவத பூர்ணம் வடமொழியில் தொன்று தொட்டு பழக்கத்திலிருந்தது. இது 18000 ஸ்லோகங்களை கொண்டிருக்கும். இதையே பட்டத்திரி 1036 ஸ்லோகங்களுடன் 100 பிரிவுகளில் அழகிய கவிநயத்துடன் சுருக்கப் புனைந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் கருத்துக்கள் தவறாமல் பொருள் மாறாமல் எழுத்துக்கள் பிறலாமல் அப்படியே பக்திமயம் சொட்ட சொட்ட, காவிய நயம் மிளர வாசிப்பவர்களை திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டும் அளவிற்கு ஒரு அற்புதமான படைப்பாகும்.
இந்த தெய்வீக நூல் கவிநயமான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து சமஸ்கிருத மொழியில் வழங்கியுள்ளார். இதை படிக்கும் போது ஷீமத் கிருஷ்ண பரமாத்மா உங்கள் முன்னால் இருப்பதை போன்று தோன்றும். சரி வாங்க இன்னைக்கு இந்த நாராயணீயம் பற்றி தெரிந்து கொள்ளவோம். உங்களுக்கு சமஸ்கிருத மொழி புரியவில்லை என்றால் அதன் மொழிபெயர்ப்பு உள்ளது அதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். நாராயணீயம் தோன்றிய கதை : இந்த நாராயணீயம் குருவாயூரில் கோயில் கொண்டிருக்கும் குருவாயூரப்பனுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடவுள் கிருஷ்ணனுக்காக ஒரு கோயில் குருவாயூரில் உள்ளது. எனவே இந்த கிருஷ்ணன் குருவாயூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். எனவே இங்கு எழுந்தருளியுள்ள கிருஷ்ணனை குருவாயூர் தலைமை அல்லது தந்தை என்று அழைக்கின்றனர்.
இந்த நூல் நோய்களை தீர்க்கும் புகழ் பெற்றது. இதை படித்தால் எல்லாம் கிடைக்கும் இருப்பினும் ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கும். இறக்கும் தருவாயில் இருக்கும் நோய்களை கூட தீர்க்கும் ஆற்றல் கொண்டது. மேல்பத்தூர் பட்டத்திரி ஒரு ஆசிரியரும் ஆவார். இவர் அச்சுத பிஷா ரோதி என்றும் அழைக்கப்பட்டார். பட்டத்திரி பக்திப் பாதையில் இருக்கும் போதே அவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டார். தன்னை அந்த நோயிலிருந்து காப்பாற்ற வேண்டி குருவாயூரப்பனிடம் வேண்டினார். இதற்காக அவர் எழுதத் தொடங்கிய நூல் தான் நாராயணீயம்.
நோய் தீர்ந்த கதை : இதை எப்படி தொடங்குவது என்ற தயக்கம் எழ அவர் பெரும் கவிஞர் எழுதச்சனுக்கு கடிதம் எழுதினார். தனக்கு அதில் தக்க யோசனை தருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் "மீன் தொட்டு உண்" என்று எழுதி அனுப்பி இருந்தார். பட்டத்திரியோ சைவம் சாப்பிடுபவர் ஆனால் இந்த பொருளின் ஆழப் பொதிந்து இருக்கும் கருத்தை உணர்ந்த பட்டத்திரி கிருஷ்ணனின் மச்சவதாரத்தை முதன்மையாகக் கொண்டு நாராயணீயம் எழுதத் துவங்கினார். 100 நாட்களுக்கு ஒரு சதகம் (10 மற்றும் மேற்பட்ட ஸ்லோகங்களை கொண்டிருக்கும்) என்ற கணக்கில் 1036 ஸ்லோகங்களை எழுதினார். ஒவ்வொரு சதகமும் முடியும் போது தான் கொண்டிருக்கும் பக்கவாதம் நோயிலிருந்து தம்மை காத்து அருளும் படி வேண்டினார். 100 நாட்கள் முடியும் போது அவரது நோயும் குணமானது. இப்படி தான் நாராயணீயம் தீவிர நோய்களை தீர்க்கும் ஒரு தெய்வீக நூல் ஆனது. இதை இந்துக்கள் தங்கள் வீடுகளில் நாள்தோறும் படித்து பயன்பெறுகின்றனர் .