Vijayakumar Vijayakumar

Abstract Drama Inspirational

4.5  

Vijayakumar Vijayakumar

Abstract Drama Inspirational

முதல் பயணம் முற்றிலும் பாடம்

முதல் பயணம் முற்றிலும் பாடம்

7 mins
782



"நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ,ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" 


என்றும் அறிவியல் மாமேதை டாக்டர்.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் சொல்லிக்கேட்டு இருப்போம். உண்மை தான், ஆனால் அதற்கான தருணமும் ,வாய்ப்பும், கை தூக்கவும் ,மாட்டி கொண்ட வழியில் சரியான பாதையைக் காண்பிக்க ஆளில்லாமல் அழிந்து போனவர்கள் ஏராளம்.ஆக கஷ்டம் என்ற ஒன்றும் தான் உன்னை அடையாளம் காண்பிக்கவும் ,அதே சமயம் அழிக்கவும் வழி வகுக்கும்.அந்த வகையில், 


“பகலின் நீளத்தை புரிய வேண்டுமென்றால் வேலை இல்லாதவனிடமும் & இரவின் நீளத்தை நோய் வாய்ப்பட்டுக் கட்டிலில் படுத்து கொண்டு இருப்பவனிடமும் கேளுங்கள்” என்று சொல்வார்கள்.


“விசவாயுவின் நாற்றத்தின் உணர வேண்டுமென்றால் வாய் விட்டு சிரித்து கூவம் ஆற்றங்கரையில் குடி இருக்கும் எம்மக்களிடம் சென்று வாருங்கள்”

 

இப்படி ஏராளம் ,கஷ்டம் என்ன என்பதையும் ,மேலாண்மை பற்றி மிக தெளிவாக நேரலையாக பயிற்சியுடன் தெரிந்து கொள்ள வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக குறைந்தது 6 மணி நேரம் இரவில் பயணிக்க கூடிய ஒரு விரைவு தொடர் வண்டியின் முன் பதிவில்லாத பொதுக் கூண்டில் பயணம் செய்யுங்கள்.


 அடித்துப் பிடித்துக் கொண்டு பைகளைத் தூக்கிக் கொண்டுப் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் , மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு புறம் சற்று ஓர அமர வைத்துவிட்டு சட்டைப் பையில் இருந்த சில்லரையை எண்ணிப் பார்தேன்.பேருந்து இன்னும் வரவில்லை ,நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. புகை வண்டியைப் பிடித்துப் போய்விடலாம் என நினைத்தேன் . சரி ஆட்டோவில் செல்லலாம் என்றால் ,சில்லரை போதவில்லை.எண்ணி முடிக்க பேருந்து வந்தது ,ஏறினோம் ,சென்றடைந்தோம் புகை வண்டி நிலையத்தை.குழந்தைகளுக்கு அளவற்ற ஒரு மகிழ்ச்சி ,தண்ட வாளங்கள், புகை வண்டிகளின் நேரம் அறிவிப்பு.ஏதோ சுற்றுலா வந்திருப்பது போல ஒரு ஆரவாரம் .பின்ன இருக்காத என்ன, வீட்டை விட்டு பள்ளி ,கூலி வேலையை தவிர்த்து இதுதான் முதல் முறை இப்படிபட்ட இடத்திற்கு வந்திருப்பது.ன்சுற்றிப் பார்த்தால் கண்ணாடி அறைகள்,சிறைச்சாலையில் உள்ளது போல கம்பி வேலியிட்டு கை மட்டும் போகுமளவுக்கு ஒரு ஓட்டை .உண்மையில் ஒன்றும் புரியவில்லை எனக்கு . எங்கு போவது ,யாரை கேட்பது ,என்ன கேட்பது என்று.தட்டு தடுமாறி ,தலையில் உள்ள மூட்டை முடுச்சுகளை இறக்கி வைத்து விட்டு கை கட்டி ஒருத்தரிடம் கேட்க ,பதில் வந்தது .கிளம்பினேன் . அங்கே போனால் 1 கிலோமீட்டர் சிமெண்ட் தரை.மறுபடியும் தயக்கம் ,ஒரு வழியாக நான் எடுத்த பயண சீட்டுக்குத் தேவையான பெட்டி நிற்கும் இடத்திற்கு வந்தடைந்தேன் . 


"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதை போல ஒரு அனுபவம். 


மக்கள் கூட்டம் ,குழந்தைகளின் பேரின்பம் ,கூச்சலிட்டு கொண்டும் செல்லும் வண்டிகள் ,ஒருபுறம் கார் போன்ற மாதிரி வாகனங்கள் ஆட்களை ஏற்றி இறக்கி விட்டு கொண்டிருக்கிறது .வண்டியோ இரவு 10 மணிக்கு தான் ,நான் வந்து சேர்ந்ததோ மாலை 5 மணி .இன்னும் சரியாக 5 மணி நேரம் நாங்கள் இங்கு காத்திருக்க வேண்டிய நிர்பந்தம்.ஆட்கள் வர தொடங்கினார்கள் ,சட்டென்று பார்த்தால் பைகள் வரிசையில் உட்கார்ந்தன.அதாவது முன் பதிவில்லாத டிக்கெட்களுக்கு இந்த மாதிரி ஒரு வரிசை இருக்கும்.இது முற்றிலுமாக வண்டி வந்தவுடன் ஏறும் போதும் ஏற்படும் சண்டை மற்றும் சச்சரவுகளை தவிர்க்க வேண்டிய ஒரு முறை.அதாவது சுருங்க சொன்னால் “முதலில் வருபவர்க்கே முதல் உரிமை” 


பைகளின் நீளம் சாரை சாரையாக உட்கார்ந்தது.மணி 8 ஆனது ,சிலர் தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொண்டு தண்ணீர் நிரப்புகிறார்கள் ,சிலர் அரக்கப் பறக்க பார்சல் திறந்து சாப்பிடுகிறார்கள் ,இன்னும் சிலர் காலில் வெந்நீரை ஊற்றியது போல் தண்டவாளங்களை வெறித்து கொண்டு பார்க்கிறார்கள் இன்னும் புகை வண்டி வரவில்லையே என்று. பீய்ச்சு அடிக்கிற வெளிச்சம் மிக தொலைவில் தெரிந்தது ,அனைவரும் கண்ணை உறுத்திக் கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். ஆம் நம் ரயில் தான் என்று உறுதி செய்தார்கள்.


லத்தி வைத்துக் கொண்டு 5 காக்கி சட்டைகள் தடுத்து நிறுத்தியது ,சந்துல நுழைபவர்களை. பைகளை எடுத்து தோள்களிலும் ,தலைகளிலும் ,இடுப்பிலும் எடுத்து வைக்கிறார்கள் . இன்னும் ஒருமுறை சுற்றி பார்த்து கொள்கிறார்கள் வேறு எதாவது தவறவிட்டுவிட்டோமா என்று.இது தான் “செய்ய வேண்டிய காரியங்களுக்கு தயராதல் மற்றும் தேவையானவற்றை சரிபார்த்து கொள்ளுதலுக்கு” தயாக்ர்செய்தல்.


புகை வண்டி வந்தது ,நின்றது.அகதிகளாக இன்னொரு நாட்டிற்கு போவதை போல இருந்தது சுற்றி இருக்கும் சூழ்நிலையை பார்த்தால்.அப்போது தான் நினைவு வந்தது சொந்த நாட்டிலும் அகதிகளை போல தான் வாழ்கிறோமோ என்று.இவ்வளவு நேரம் காத்திருந்த வரிசை நகர்ந்தது ,சிலர் இடையில் நுழைய முயற்சிப்பதும் ,அவர்களை மிக அசிங்கமாக திட்டுவதும் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டும் இருக்கிறது. நிறையப பேருக்கு ஜன்னல் ஓரம் இருக்கும் அந்த ஒரு தனி இருக்கையை பிடிக்க போட்டா போட்டி.ஆனால் கிடைத்தது என்னவோ 4 பேர் அமரும் இருக்கை.உள்ளே ஒரு காவலர் சரியாக இருக்கையில் அமர வைக்க. அனுமதிக்கப்பட்டது ஒரு பெட்டி, ஆக்கிரமிப்பு முடிந்தது .ஆனால் வரிசையில் இன்னும் பாதி பேர் நிட்கிறார்கள்.இப்போது அந்த நான்கு பேர் கொண்ட இருக்கையில் அடக்கி வைத்து ஆறு பேர் உட்கார சொல்வார்கள்.அதற்கு தான் திட்டமிட்டு,


“இருக்கும் சூழ்நிலையை அறிந்து இடையூறு இல்லாதவாறு சரியான இடத்தை தேர்வு செய்ய தெரிந்திருக்க வேண்டும்”


இதற்கு தான் தனி ஆளாக போகும் போது தனி இருக்கையும் ,குடும்பத்துடன் போகும் போது நீள இருக்கையும் இடம் பிடிக்க வேண்டும்.இன்னும் சிலர் வரிசையில் நிற்கிறார்கள். அது 4 பேர் உட்காரும் இருக்கைக்கு மேலே இரும்பு கம்பிகளால் ஆன ஒரு அடுக்கு இருக்கும். முன்பெல்லாம் அது சாமான்களை வைக்க மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்பொழுது இது ஆட்கள் உட்காருவதற்கு உட்படுத்தப்பட்டது.இது எல்லோரும் அறிந்த உண்மை,அதாவது காலை மடக்கி உட்காரும்போது வலி உயிரை பிடுங்கும்.ஆனாலும் வேறு வழியில்லை. 


"இக்கரைக்கு அக்கறை பச்சை " தரையில் உட்காருவதை விட இது மேல் (ஒரு வேளை மேலே உட்கார்ந்திருப்பதால் என்னவோ).ஒரு வழியாக இதுவும் முடிந்தவுடன் மிக சில பேர் இருப்பார்கள் வரிசையில். அவர்களுக்கு தரை தான் சொர்ப்பனம் .இடம் பிடித்து உட்க்கார்ந்து கொண்டு இருக்கிற அனைவருக்கும் ,அவரவர் இருக்கும் இருக்கைக்கேற்ப ஒரு விதமான செருக்கு இருக்கும்.என் நண்பனோடு சேர்ந்து உட்கார வேண்டும், இவருக்கு உடம்பு சரியில்ல கொஞ்சம் தள்ளி உட்கார முடியுமா, சாப்பிட மட்டும் கொஞ்சம் அனுமதி ,இந்தக் குழந்தையை மட்டும் லேசா உட்கார வையுங்க என்று பல சாக்குப் போக்குகளில் மனிதம் இருக்கத்தான் செய்கிறது.இதில் சண்டை வந்து பின்னர் விட்டு கொடுப்பவர்களும் உண்டு.இது மாதிரியான மோதல்களை முன் பின் அறிமுக இல்லாத நபரிடம் சமாளிப்பது தான் “முரண்பாடு மேலாண்மை ” என்று சொல்வார்கள்.நமக்கு கிடைக்கவேண்டிய ஒன்றோ அல்லது அடுத்தவரின் தவறுக்கு நமக்கு விமர்சனம் விழுகிறதோ அல்லது சிலர் வேண்டுமென்றோ நம்மை கடுப்பேத்தும் செயல்களை செய்யும் போது ,முகம் சுழிக்காமல்,மென் வார்த்தைகளால்,பொறுமையாக,அதே சமயம் ஆணித்தனிமாக கருத்தை தெரிவித்து சமாளிப்பதாகும்.


காக்கி சட்டைகள் அப்பாடா என்று பெட்டிகளை விட்டு கீழிறங்க ,முன் பதிவு செய்தவர்கள் மெதுவாக அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பிரத்யமான இருக்கைக்கு சென்று அமர்கிறார்கள் ஒரு புன்னகையுடன்.டிக்கெட் பரிசோதகர் ,லோகோ பைலட் என அனைவரும் தயாராக இருக்க மிக அதிக சத்தத்தில் ஒலிப்பான் ஒலிக்க ரயிலுக்கென ஒரு சத்தத்துடன் மெதுவாக நகர்கிறது பச்சை விளக்கு எரிந்தவுடன்.அந்த பெட்டியில் 75 பேர் உட்கார கூடிய அளவில் இருக்கைகள் தான் இருக்கும் .ஆனால் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தால் கிட்டத்தட்ட 150க்கு அதிகமாக இருக்கும்.சிலர் அப்படியே தலை சாய,சிலர் மொபைலுடன் பிசைந்திருக்க, சிலர் குழந்தைளைத் தூங்க வைக்க , இன்னும் சிலர் தரையில் துண்டை விரிக்க இப்படியே நீள அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. தரையில் இருக்கும் சில காலி இடங்களும் தீர்ந்து போனது.ஆனாலும் கூட்டம் குறையவே இல்லை. ரயில் பெட்டி இரும்பு என்பதால் அதனால் விரிய முடியவில்லை.உண்மையில் அந்த அளவுக்கு கூட்டம் தான் இருந்தது.கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லையா, மனுசனா இல்ல மிருகமா, வாழ்க்கையில ஒத்துப் போக மாட்டிங்களா என ஒரே வாக்குவாதங்கள்.ஏனென்றால் அவர்கள் சுகம் என்று நினைத்த இடம் இப்போது அசௌகமரியானது .சண்டை முடிவதற்குள் அடுத்த நிறுத்தம் வந்து விட்டது .

புடிச்சத விடக்கூடாது என்பற்காக சிலர் தோல் பட்டையை விசாலமாக்குகிறார்கள்,கால்களை அகலப்படுத்துகிறார்கள் . இன்னும் சிலர் தூங்குவதை போல் நடிக்கிறார்கள்.ஆனால் ஏறியவர்கள் அங்கும் இங்கும் பார்த்து படிகளிலும் ,கழிப்பறை பக்கத்திலும் இடம் பிடிக்கிறார்கள் .அதில் சிலர் கெஞ்சித் தரையிலோ அல்லது இருக்கையிலோ இடம் பிடிக்கிறார்கள். பலர் நின்று கொண்டு பயணிக்க தீர்மானித்து விட்டார்கள்.மணி நள்ளிரவு 12 ஆனது, பெட்டி முழுவதுக்கும் ஒளி விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருக்கும்.சண்டைகள் ஓரளவு குறைய , கட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது.சில விடலைகள் ,தாவணிகளை தேடுகிறது .இப்பொழுது பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது, ஆனாலும் எந்த சங்கடமில்லை எவருக்கும்.உண்மையில் தூங்குவதில் இத்தனை தோரணைகள் இருக்கும் என்றே சற்றே வியந்து போனேன் .3 அடியில் குறுக்கி படுத்தல் ,உட்கார்ந்து தூங்குதல்,படியில் கம்பியை பிடித்து வெறித்தனமாக சொக்கி விழுதல்,கழிப்பறைக்கு அருகில் வாசனையை நுகர்ந்து நித்திரையில் மூழ்குவது என பல . இதுதான் நாம் கற்றுகொள்ள வேண்டிய “கிடைத்த இடத்தில் தமக்கு தேவையானவற்றை நிவர்த்தி செய்து கொள்ளுதல்”.


இதை விடக் கொடுமை விடலைகள் சிலர் கலாய்த்துக்கொண்டே தூங்காமலே வருகிறார்கள்.இப்படியே போக அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. இப்போது கால் வைக்க இடம் பிடிப்பது தான் முக்கிய நோக்கம் , சிலர் பிடிக்க, மீதி பேர் இறங்கி அடுத்த வண்டியை நோக்கிப் புறப்படுகிறார்கள்.


கழுத்து நிறைய தங்க நகைகளை அணிந்து கொண்டு மாது ஒருவள் நட்ட நாடு ராத்திரியில் தன்னந்தனியாக நடந்து உலா வந்து மீண்டும் அதே கோலத்தில் வீடு திரும்புவாள் என்றால் அதுதான் இந்தியாவுக்கான உண்மையான சுதந்திரம் என்று சொன்ன காந்தியின் வார்த்தைகள் கண் முன்னே வருகிறது .ஏனென்றால் இந்த வகையான பெட்டியில் ஆண்கள் அதிகமாக இருக்க கூடும்.அந்த ஓரத்தில் இருக்கும் பெண் ஒருத்தி சிறுநீர் கழிக்க வேண்டுமென்றால் தரையில் படுத்து இறுக்கும் ஆட்களை மிதிக்காமல் இருக்கையில் ஏறி கால் வைத்து தாண்டி தாண்டி (ஹை ஜம்ப் ,ட்ரிபிள் ஜம்ப் போன்று) , இருக்கையில் இருப்பவர்களையும் மிதிக்காமலும் வந்து சேர,கழிப்பறைக்கு அருகில் பார்த்தால் கதவை திறக்கவே வழி இருக்காது அதுபோக அருகில் ஆண்களை பார்த்தால் இன்னொரு பயம்.வந்தது வராமலே போய்விடும்.இருந்தாலும் தட்டி மோதி கழித்து விட்டுத் திரும்பி வந்து உட்காருவதற்குள் ஒரு போரையே முடித்து விட்டு வந்த வீரம்.

இதனிடையே சிலர் அர்த்த ராத்திரியில் புகைப் பிடிக்க, அருகில் இருக்கும் லட்சியவாதி கதைக்க , அதற்குள் மது அருந்தி விட்டு வந்தவர் வாந்தி எடுக்க அரங்கமே விறுவிறுப்பானது.சண்டைகள் சர்ச்சைகள்,உட்க்கார்ந்திருந்த இடம் மாறியது.இது என் இடம் ,இது உன் இடம் என்று சண்டைகள் நீண்டது.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் என்னமோ ஏதோ என்று அலறியடித்துக்கொண்டு எழ ,விஷயம் சப்பென்று ஆகிவிட்டது .அவர்கள் மீண்டும் தூக்கத்திற்கு செல்ல,சில விடலைகள் இந்த சண்டைகளை வைத்த மீம்ஸ் போல அவர்களை கலாய்க்க அப்படியே சண்டை சுருங்குகிறது.இத்தனை பேரையும் இந்த பெட்டிக்குள் ஒதுக்கப்பட்ட அளவை விட அடைத்து வைக்க முடியுமென்றால் , இதை சாதனையாக கருத வேண்டுமா அல்லது வேதனையாக வெம்ப வேண்டுமா?


கழிப்பறை ,தரை ,ஒற்றை இருக்கை,நீள இருக்கை ,இரும்பு கற்று இருக்கை என உட்கார்ந்து இருக்கும் இடத்தை வைத்து உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஜாதியும் மதமும் இங்கிருந்து தான் பிறக்கிறதோ என சந்தேகமும் எழுகிறது .இதில் என்ன வேடிக்கை என்றால் வசதி இருக்கும் சிலர் சூழ்நிலைகளால் இந்த பெட்டியில் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 


இன்னும் சிலர் இதில் தான் பயணிக்க வேண்டும் என்று தெரிந்து செல்பவர்கள் ,நீ என்ன மனுசனான்னு கேள்வி எழும் போது ,அவர்கள் விடும் ரீல் இருக்கிறதே "நான் எல்லாம் சம்பாரித்து விட்டேன் ,எனக்கு மிக பெரிய வசதி இருக்கிறது,நான் சாதாரணமானவன் இல்லை ..."என்று சொல்லி முடிப்பதற்குள் எல்லாம் இருந்த பின்ன ஏன் இதுல வர்ர ,புக் பண்ணி ஏ.சி.கோச்ல போகலாமே? என நச்சென்று ஒரு கேள்வி . பதில் சொல்ல முடியாமல் தலை குனிவு .இப்படியான நீயா நானா விவாதங்களுக்கு குறையே இருக்காது .அதற்குள் சில பெருசுகள் அதிகாலைல எழ ,அப்படியே அவர்கள் குடும்பத்தாரை எழுப்ப,சிறு குழந்தைகள் சினுங்க,அப்படியே பட்டியல் நீண்டது.வசதியான பெட்டிகளில் ஒளி வெளிச்சம் ஒளிர்கிறது . கையை உரசி கன்னத்தில் வைத்து ,மேல் தூக்கி மடக்கி வைத்து மிக நல்ல தூக்கம் என எண்ணி அதற்குள் இடம் வந்துவிட்டதா என வினவுதல்.இப்படியே சத்தமில்லாமல், இறங்க தரை காலியாக , பின்னர் இருக்கை காலியாக , பின்னர் பெட்டியே காலியானது.ஏறும் போது எதிர்த்துப் பேசி உட்காரவிடாமல் சிலருக்குள் பலி தீர்த்து கொள்கின்றனர் அடித்து மல்லுகட்டிக் கொண்டு.ஒரு பெரிய அதிர்ச்சி அதே சமயம் பெரிய பாடம் , ஒரு பயணத்தில் இவ்வளவு போராட்டமா என்று.


சரி கற்ற பாடங்கள் என்னென்ன,ஒரு கழுகுப் பார்வை பார்த்துவிடலாமா..

“முதலில் வருபவர்க்கே முதல் உரிமை” 

“செய்ய வேண்டிய காரியங்களுக்கு தயராதல் மற்றும் தேவையானவற்றை சரிபார்த்து கொள்ளுதலுக்கு”

“இருக்கும் சூழ்நிலையை அறிந்து இடையூறு இல்லாதவாறு சரியான இடத்தை தேர்வு செய்ய தெரிந்திருக்க வேண்டும்”

“முரண்பாடு மேலாண்மை ” 

“கிடைத்த இடத்தில் தமக்கு தேவையானவற்றை நிவர்த்தி செய்து கொள்ளுதல்”


பயணங்கள் முடிவதில்லை ஆனால் தவறுகள் முற்றுப்புள்ளி அடைய வேண்டும்.ஏழை,பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு அறவே ஒழிய வேண்டும்.முடிந்தவன்,முடியாதவன் என்ற இயலாமை அடியோடு விரட்டப்பட வேண்டும்.முடிந்தவரை அடுத்தவரின் நிலைமையை புரிந்துகொண்டு அவருக்கு உதவவில்லை என்றாலும் எந்த விதத்திலும் உபத்திரமாக இருக்க வேண்டாம்.


சில இடங்களில் சில ஒழுக்கு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்,தவிர வீம்புக்கென்று மீறுவது இறுத்தல் கூடாது.அப்படி செய்ய நினைக்கும் போது நம் குடும்பத்தாரோ அல்லது நெருங்கிய நண்பர்களோ இருந்தால் அப்படி செய்து இருப்போமா.சமூகத்தில் ஒவ்வொருவரும் சார்ந்தே இருக்கிறோம் ,ஆதலால் நாம் செய்கிற ஒவ்வொரு வினையும் நமக்கு வந்து சேரும் என்பதை உங்கள் உடம்பு முழுவதும் விதைத்துவிடுங்கள்.


இதை படித்த பின்னர்,தங்களுடைய சிந்தனை பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்!!!




Rate this content
Log in

More tamil story from Vijayakumar Vijayakumar

Similar tamil story from Abstract