Prabhakaran Prabhakaran

Abstract

4.9  

Prabhakaran Prabhakaran

Abstract

மரத்தின் ஞானம்

மரத்தின் ஞானம்

3 mins
530மரங்கள் நாம் வாழ்வதற்கு கிடைத்த வரங்கள்.. வாழ விடுங்கள்.. 


மரங்களை காப்போம், வனங்களை காப்போம், வன உயிரினங்களை காப்போம் என்ற கோஷங்கள் பெருந்திரளாக நாம் இன்று உறக்க கூறிக்கொண்டே வருகிறோம் எதற்காக? ஏன் மரங்களையும், தாவரங்களையும் பாதுகாக்க வேண்டும். அவைகள் இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்வி கேட்கலாம். நகரங்களில் நாங்கள் மரங்கள் இல்லாமல் வாழவில்லையா? என்றும் கூட நம்மில் பலர் கேட்கக் கூடும். மரங்கள் தான் பூமிப் பந்தின் கூரை வீடு. நம் வீட்டிற்கு எப்படி விதவிதமான கூரை வேய்ந்து பாதுகாக்கிறோம். அதைப்போல தான் மரங்களும் இந்த பூமியின் மேற்பரப்பில் கூரையாக வேய்ந்து பாதுகாக்கிறது.  இன்று வரை நம் வீட்டிற்கு மரங்களைத் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மரங்களை வளர்ப்பதில்லை. இன்று வரை நாம் சுவாசிக்க காற்றை தருகிறது, ஆனால் நாம் பாதுகாப்பதில்லை. இன்று வரை நாம் குடிப்பதற்கு நீரைத் தருகிறது. ஆனால் மரங்களை நேசிப்பதில்லை. ஆனால் பறவைகள் மரங்களை வளர்க்கின்றன. மரங்களை பாதுகாக்கின்றன. 


நமக்கு உண்ண காய், கனிகளாக, கூரையாக,, கட்டில், நாற்காலியாக, நாம் பிறந்து வளரும்பொழுது நடந்துப் பழக மூன்று சக்கர வண்டியாக, வீட்டை அழகாக்கும் அலங்கார பொருளாக, உடலை பலமாக்கும் மருந்தாக, நாம் நலமோடு வாழ சமைக்கவும், இறந்தால் எரிக்க விறகாகவும் என எண்ணற்ற பயன்களை தருவதில் மரங்களை தவிர யாரால் தரமுடியும் கூறுங்கள். மின் மயானத்தில் மின்சாரம் கொண்டு எரிப்பதற்கு கூட சிறிதளவு விறகை வைத்தே எரிக்கின்றனர். ஏன் அண்மையில் நான் பணிப் புரியும் பகுதியில் பெரிய காய்ந்த மரத்தின் பட்டையை எடுத்து இரு சக்கர வாகனத்தை இருக்கை நனைந்துவிடாமலும், வெயிலின் சூட்டிலிருந்து காக்கவும் மூடி வைத்திருந்தார் ஒருவர். அவ்வழியே சென்ற என்னால் அதைப் பார்த்தவுடன் மரங்கள் செய்யும் நன்மைகளை எண்ணி உடல் சிலிர்த்தது.  


கூரை இல்லா வீடு வீடல்ல. அதுப்போலவே மரங்கள் இல்லா பூமி வெரும் ஒரு கோளம்தான். . மரங்கள் தருகின்ற பழங்களை தின்று விதை நாளும் விதைத்தவண்ணம் இருக்கின்றன பறவைகள். நாமோ இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டியெறிந்த வண்ணம் இருக்கிறோம். நமக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் பார்த்தீர்களா? சில மரங்கள் நூற்றாண்டுகளை தாண்டி பயனளித்தபடி வாழ்நதிருக்கின்றன. இப்போது அத்தகைய மரங்களை காண முடிகிறதா? எங்கோ ஒரிரு இடங்களில், யார் கண்ணும் படாத இடங்களில் தான் இன்று பார்க்க முடியும். உங்கள் வீட்டிற்குள் குளிர்சாதன பெட்டியை (Air conditioner) வைத்து விட்டால் போதும். அதனால் குளிரும் வரும், குளிருடன் சேர்ந்து நோயும் வரும். ஆனால் மரமாகிய என்னில் தோன்றும் இலைகளால் தான் இந்த பூமிக்கே குளிர்ச்சி வரும். அதனுடன் நமக்கு ஆரோக்கியமும் வரும் மரங்களே இல்லாத உலகில் உங்களால் வாழ்ந்திட முடியுமா சொல்லுங்கள்? என்னை வளர்த்தால் தான் உங்களால் சுவாசிக்க முடியும். அப்போது தான் உங்கள் ஜீவன் வாழ முடியும். உங்களால் மரங்களே இல்லாமலும் சுவாசிக்க முடியும்.. எப்படி என்கிறீர்களா? நம் வளர்ச்சிக்காக உருவாக்கிய தொழிற்சாலைகள், பலக் காரணங்களால் ஏற்படுகின்ற புகை, இதுப் போதாதென்று பீடி, சிகரெட் புகை என்று உருவாகின்ற புகைகளை சுவாசிக்க முடியும். ஆனால் என்ன உடலில் உயிர் தான் எல்லையை கடந்துவிடும். 


நம் இந்தியாவில் சுமார் 70 % காடுகள் இருந்திருக்கும். மனித சமுதாயத்தின் அறிவியல் வளர்ச்சியால், மனிதனின் மதி நுட்பத்தால் இன்று வெரும் 22% காடுகளை மட்டுமே கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நபர் ஒருவருக்கு 28 மரங்கள் தான் இருப்பதாக ஒரு ஆய்வில் கூறியிருக்கிறார்கள். ஆக அந்த 28 மரங்கள் இன்றைய தலைமுறையினரின் வாழ்வை கூட்டிடுமா? இல்லை அடுத்த தலைமுறையை வாழ வைக்க போதுமா? யோசியுங்கள்!! பணம் தேவைக்காக மட்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் தேவையற்ற வசதிகளை குறைத்து இயற்கை சூழலுடன் வாழலாம். சுமார் 80,90 ஆண்டுகள் வாழ்ந்த உயிர் இன்றைய பேராசையால் குறைந்த அளவே 60, 70 யை கடக்கின்றன. அதற்கு காரணம் இன்றைய நம் வாழ்க்கை முறையே. இயற்கையை அழித்து நாம் சாதித்துவிடலாம் என்ற நப்பாசை. ஆனால் விளைவு என்னவோ தலைக்கீழ். ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் பெரிய பெரிய சேதங்களை ஏற்படுத்திவிட்டு என்னை சீண்டாதீர்கள். நான் வெகுண்டால் நீங்கள் தாங்க இயலாது என்று கொக்கரித்துவிட்டுத்தான் சென்றுக்கொண்டிருக்கிறது. 


மரங்களின், செடிகளின், புற்களின் வேர்க்கால்கள் மட்டும் தான் இந்த பூமியை பற்றித் தாங்கிக் கொள்ளமுடியும். வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் என தாவர உண்ணிகளாலும் தான் ஒவ்வொரு விதைப்பறவலையும் செய்து வருகின்றன. நாம் கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் மரங்கள் நடவு செய்திருப்போம். அத்தனை மரங்களும் இன்று வளர்நதிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அவைகள் இருக்கின்றனவா? நம் முன்னோர்கள் இன்றைய தலைமுறையினரின் செயல்காடுகள் எப்படி இருக்கும், நம் மண்ணையும், மரங்களையும் எப்படி வைத்துக்கொள்வார்கள் என்று அறிந்திருக்கக்கூடும். அதனால் தான் ஆல மரங்களையும், அரசு, வில்வம், வேப்பமரம், வைத்த இடங்களில் கோவில்களை கட்டி வழிபட ஆரம்பித்தார்கள். அம்மரங்கள் பெருமளவு கரியமில வாயுவை சுவாசித்து உட்கிரகித்தும் தூய ஆக்ஸிஜனை நமக்கும் தந்து தானும் வாழ்ந்து நம்மையும் வாழ வைக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம் நாம் வாழ்வதற்கு கிடைத்த வரங்களான மரங்களையும், தாவரங்களையும் அடியோடு அழித்துவிடுகிறோம். எங்கே சுயநலம் புறையோடிக் கிடக்கின்றது. எங்கிருந்து மரங்களை வெட்டினாலும், அவற்றின் தன்மை அறிந்து தடுக்க வேண்டும். நீரோடை, ஆறுகளின் ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். கழிவு நீர் கலக்காத நீர்நிலைகளாக பாதுகாக்க வேண்டும். அப்போது தான் மரங்களும் செழிக்கும், நம் வாழ்வும் செழிக்கும் என்று கூறி மீண்டும் ஒரு நல்ல கட்டுரைத் தொடரில் சந்திக்கும் வரை... சிந்திப்போமா!!!!.. வாழ்க மரங்களுடன்.. வளர்க மரங்களுடன்.. Rate this content
Log in

Similar tamil story from Abstract