Muthukumaran Palaniappan

Classics

5  

Muthukumaran Palaniappan

Classics

மனித ஆசைகள்

மனித ஆசைகள்

1 min
492



   சிறந்த மனித பிறவியில் பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை பயணம் இயல்பாக சென்று

கொண்டிருக்கும் பொழுது ஆசைகளின் ஆதிக்க ஊடுருவல் எப்படி நடைபெறுகிறது என்பதை

இந்த சிறுகதையில் எனது அனுபவத்தின் வழி என் மனதில் பதிந்த கருத்துக்களை

உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


   எப்பொழுதும் நம் ஆசைகள் அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நாம்

அதன் கட்டுப்பாட்டில் ஒருபோதும் இருக்க கூடாது. அப்படி நாம் அதன் கட்டுப்பாட்டுக்குள்

 சென்றுவிட்டோம் என்றால் என்றாவது ஒரு நாள் ஆசை என்னும் கடல் அலை பேராசை

 என்னும் அழிப்பேரலையாக மாறி நம் வாழ்க்கையை  இருந்த இடம் தெரியாமல்

அழிந்துவிடும். .  மனிதன் ஆசைப்படுவது தப்பில்லை ஆனால் அந்த ஆசையை

எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைப்பது தான் தவறு . ஆசைகளே இல்லாமல்

மனிதன் வாழ்வது சிரமம் தான் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நம்முடைய ஆசை

என்னும் பசுமையான செடி நம்மிடம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அப்படி

இருக்கும் செடிகளுக்கு இடையே பேராசை என்னும் விஷ (களை) செடிகளை வளர விடாமல்

ஆரம்பத்திலேயே வேரோடு பிடுங்கி விட வேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் ஆசை நம்

கட்டுப்பாட்டுக்குள் இருந்து நம் வாழ்க்கையை சரியான திசையில் கொண்டு சென்று வெற்றி

அடையச்செய்யும். அத்தனைக்கும் ஆசைப்படு ஆனால் அனைத்தையும் எப்படியாவது

அடைய தவறான பாதையில் செல்லாதே.

   சில நேரங்களில் நம் ஆசைகள் நம்மை குற்றவாளி ஆக்கிவிடுகின்றன. நம்முடைய

தரத்தையும் தன்மையையும் குறைத்து விடுகிறது. ஆசைகள் எப்பொழுதும் நிரந்தரமானதாக

 இருக்கக்கூடாது நிலை அற்றதாக இருக்க வேண்டும். நம் மனம் சார்ந்த ஆளுமைக்கு கட்டு

பட்டதாக இருக்க வேண்டும். நம் மனம் எப்போதும் நம் ஆசைகளை அளவுகோலாக இருந்து

அளந்து கொண்டே இருக்க வேண்டும். ஆசைகள் எப்பொழுது நம் கட்டுப்பாட்டில் இருக்க

வேண்டும் அப்படி மீறும் பட்சத்தில் பேராசையாக மாறி சுனாமி , புயல், சூறாவளி காற்றை

போல உருவெடுத்து நம்மை திடீர் என்று அழித்துவிடும். எப்பொழுதும் ஆசைகள் அளவோடு

 நம் கட்டுப்பாட்டில் இருந்தால் சிறப்பு. எந்த சந்தர்ப்பத்திலும் ஆசை நம்மை ஆளக்கூடாது 

நாம்தான் ஆசைகளை ஆளவேண்டும் அற்புதமாக ஆண்டவன் நமக்கு கொடுத்த மனித

வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும்.



Rate this content
Log in

Similar tamil story from Classics