anuradha nazeer

Classics

4.8  

anuradha nazeer

Classics

மகா நாசி

மகா நாசி

2 mins
173


பெரும்பாலான தென் இந்தியாவில் இருக்கும் கோயில் கோபுரத்தின் உச்சியில் நாசி எனப்படும் சிலை இருக்கும். கடவுளின் அவதாரங்கள், மனித சிற்பம் என பல்வேறு சிற்பங்கள் அடங்கிய கோபுரமாக இருந்தாலும், கோபுரத்தின் உச்சியில் நாசி எனப்படும் பூதம் போன்ற ஒரு முகத்துடன் இருக்கும் ஒரு சிற்பம் ஏன் பயன்படுத்தப்படுகிறது என பலரும் அறிந்திராத ஒன்று.


நாசி முகம் எப்படி வந்தது?

ஒரு முறை அரக்கன் ஒருவன் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். சிவனை நோக்கி பக்தியுடன் பாடி அழைத்து கடும் தவம் இருந்தான்.


அரக்கனின் வேண்டுதலில் மகிழ்ந்த சிவ பெருமான் நேரில் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டார். எது குறித்தும் சிந்தனை இல்லாத சஞ்சலத்துடன் இருந்த அந்த அரக்கன், மிகவும் அசிங்கமாக ஏதோ ஒன்று கேட்டான்.



பல அரக்கர்கள் கடும் தவம் இருந்து சாகா வரம் வேண்டும் என வரம் கேட்பது வழக்கம். ஆனால் இந்த அராக்கனோ மோசமான, கேவளமான விஷயத்தை சிவபெருமானிடம் கேட்டதும், பொறுத்துக் கொள்ள முடியாத சிவபெருமான், உன்னை ஒழித்து கட்டுகின்றேன். உன்னை சாப்பிட ஒரு பெரிய பூதம் உண்டாகட்டும் என்றார்.



சிவன் கூறியதும் அந்த அரக்கனை சாப்பிட ஒரு பெரிய பூதம் (நாசி) உருவானது. அரக்கனை சாப்பிட துரத்தியது.


நாசி உருவம்:

பயந்து போன அரக்கன், தன் தவறை உணர்ந்து சிவ பெருமானின் காலில் விழுந்து, என்னை மன்னித்து விடுங்கள். நான் கேட்டது தவறு. என்னை காப்பாற்றுங்கள் என கதறினான்.




கருணை கொண்ட சிவபெருமான், பிழைத்துப் போ, இனி இப்படிப்பட்ட என்னத்துடன் இருக்காதே என அனுப்பினார். சிவன் உருவாக்கிய பூதமோ, அய்யனே அரக்கனை சாப்பிடத்தான் என்னை படைத்தீர்கள் ஆனால், அவனை மன்னித்து அனுப்பி வைத்துவிட்டீர்கள். இப்போது நான் என்ன செய்வது? என கேட்டார்.




சரி அப்படியென்றால், உன்னை நீயே சாப்பிட்டுக் கொள் என்றார். சரி என்ற அந்த நாசி பூதம் தன்னைத் தானே சாப்ப்பிட்டுக் கொண்டிருந்தது.



பெருமை கொடுத்த சிவன்:

நாசி என்ற அந்த பூதத்தின் செயலைப் பார்த்த சிவபெருமான், அவனின் தலை மட்டும் இருப்பதை கண்டு அதிர்ந்தார். கடைசியாக உடலை சாப்பிட பயன்படுத்திய கையை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.


அப்போது சிவன் உன்னை நீயே சப்பிடுகிறாயே. நீ சாதாரணமானவன் அல்ல. நீ கடவுளுக்கும் மேலானவன். நீ கடவுள்கள் வீற்றிருக்கும் கோயிலில் கடவுளை விட உயரமான இடத்தில் இருப்பாய்.


பெரும் புகழுக்குரியதும், மதிக்கத் தக்கதுமாக உன் முகம் இருக்கும் என கூறி கோயிலின் கோபுர உச்சியில் இருப்பாயாக என சிவன் அருளினார்.



அப்படிப் பட்ட பெருமை வாய்ந்தது தான் கோயில்களின் உச்சியில் காணப்படும் அந்த நாசி எனும் பூத முகம்.

கோபுரத்தி ல் மட்டுமல்லாமல் கடவுள் சிலைக்கு பின்னர் திருவாட்சியின் நடுவிலும் இந்த நாசி எனப்படும் பூதம் காணப்படுகின்றது.


பொதுவாக கோபுரத்தில் இருக்கும் பூத முகத்திற்கு நாசி என அழைக்கப்படும். கோபுரத்தின் மேலே பெரிதாக இருக்கும் அந்த முகத்திற்கு மகா நாசி என அழைக்கப்படுகிறது.


Rate this content
Log in

Similar tamil story from Classics