இறைவன் காட்சி கொடுத்து
இறைவன் காட்சி கொடுத்து
சிவனடியார்க்கு பலர் தொண்டு செய்து உள்ளனர் அதில் ஒரு அந்தணர் சிவனடியார்களுக்கு எல்லாம் கோவணம்
கொடுப்பார். சிவனடியார்களை நன்கு உபசரிப்பார்.
ஒருமுறை சிவபெருமான் அவரை சோதிக்கும் பொருட்டு தன் கோவணத்தை கொடுத்து துவைத்து வைக்கச் சொன்னார் தான் சற்றே வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றார்
கோவணத்தை துவைத்து அலசி கொண்டிருந்த போது அந்த கோவணம் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது சிவனடியார்க்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.
சிவனடியார் வந்து தன்னிடம் கேட்டால் என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பித் தவித்தார்.
சிவனடியார் வந்து தன் கோவணம் வேண்டும்
என்று கேட்டார்.அந்த கோவணம் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது.என்றார். சிவனடியார் .
இல்லை. என் கோவணம்தான் வேண்டும்’’ என்று அடம்பிடித்தார் அந்த அந்தணர்.. கடைசியில், தன் கைத்தடியில் சுற்றியிருந்த கோவணத்தைக் கொடுத்து, ``இதற்குச் சமமாக மாற்று உடை கொடு’’ என்றார்.
ஒரு தட்டில் அந்தணர் கொடுத்த கோவணம். மறு தட்டில் தன்னிடம் இருந்த அருமையான பட்டுக் கோவணத்தை வைத்தார் அமர்நீதி நாயனார். தராசு முள் அசையவில்லை. பொன்னாடைகள், ஆபரணங்கள் எல்லாவற்றையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லை. கடைசியில் அமர்நீதி நாயனாரும், அவர் மனைவியும், பிள்ளைகளும் தராசுத் தட்டில் ஏறினார்கள்.
அப்போதுதான் தராசுத் தட்டு சமமானது. இறைவன் அவருக்குக் காட்சி கொடுத்து, அவரைத் தன் அடியவராக ஆட்படுத்திக்கொண்டார். இப்படித்தான் அடியார் பெருமக்கள் உண்மையின் உரைகல்லாக வாழ்ந்தார்கள்.உண்மையான ஆன்மிக, அன்பு வாழ்வின் அடித்தளம்.
