இராம நாம மகிமை
இராம நாம மகிமை
1. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் ‘ராம நாமா’ வை ஒரு முறை சொல்லமுடியும்.
2. ‘ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
3. ‘ராம நாமா’ மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல ‘ராம நாமா’ வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை, ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
4. ‘ராம நாமா’ நமது ஒரே அடைக்கலம். அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
5. ‘ராம நாமா’ சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
6. ‘ராம நாமா’ சொல்லச்சொல்ல சொல்லுவதன் மூலம் பார்ப்பது ராம், பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம், புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம், நன்மை, தீமை , இன்பம் துன்பம், எல்லாம் ராம், எல்லாம் ராம், எல்லாம் ராம்
7. ‘ராம நாமா’ சொல்ல சொல்ல பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம். அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ” ராம் “. அதுவே உருவம் கொண்டபோது, தசரத ராமனாக, சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
8. ‘ராம நாமா’ சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும், நிகழ்ச்சிகளுக்கும் ‘ அந்த ஒன்றே !’ காரணமாகிறது என்பதும் எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .
9. ‘ராம நாமா’ எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் ‘ராம நாமா’ சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் “நா உண்டு, நாமா உண்டு” என்றனர் பெரியோர்கள் .
10. ‘ராம நாமா’ அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding…இல் உள்ள குணங்களுக்கு காரணமான கோபம், வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான gene coding யை அழித்து ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.(‘யத் பாவோ தத் பவதி’–எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)
11. ‘ராம நாம’ ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் ‘ராம நாமமே ‘ தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
12. ‘ராம நாம’ ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
13. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் ‘ராம நாமா’ ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் ஜீவன்முக்தி ) முக்தி தரும்.
14. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் ‘ராம நாமா’ சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.’ராம நாமா’ சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
15. பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
16. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் ‘ராம் ‘ என்றே நடக்கவேண்டும் .
