anuradha nazeer

Classics


4.5  

anuradha nazeer

Classics


இந்தளவுக்கு மிகப்பெரிய அளவுல உதவி செய்றது

இந்தளவுக்கு மிகப்பெரிய அளவுல உதவி செய்றது

2 mins 11.7K 2 mins 11.7K

காவல்துறையில் இதுதான் முதல்முறை!’ - நெகிழ்ச்சியில் கண்கலங்கிய வடுவூர் மக்கள்

இது மிகப்பெரிய உதவி. கொஞ்சம் கூட சிரமமாக நினைக்காமல், இங்கேயே தேடி வந்து கொடுத்தது, உயர்வான செயல். எங்க ஊர் மக்கள் எல்லாரும் மனதார அவங்களுக்கு நன்றி தெரிவிச்சோம்

காவல்துறையினர் என்று சொன்னாலே, இரும்பு மனம் படைத்தவர்கள் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. குறிப்பாக சக காவலர்களுக்குள் பெரிதாகச் சொல்லும் அளவுக்கான எந்த ஓர் உதவியும் செய்யமாட்டார்கள் என காவல்துறை வட்டாரத்திலேயே ஒரு பேச்சுண்டு. இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் ஒன்றாக இணைந்து செய்த ஓர் மனிதநேய உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் அருண்காந்தி, சென்னை மாநகர காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த இவர், பணிச் சுமையின் காரணமாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அருண்காந்தியின் இழப்பால், அவரது குடும்பத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியானது. மிகவும் ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அருண்காந்தி, காவல்துறையில் பணிக்குச் சேர்ந்த பிறகுதான் இவரது குடும்பத்தினர் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

இவரது பெற்றோர், விவசாயத் தொழிலாளர்கள். அருண்காந்திக்கு திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி, ஒரு வயது மகளும் இருக்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், சக காவலர்கள் மட்டுமல்லாமல், இவரது முகம் கூட அறியாத தமிழ்நாட்டில் உள்ள பல காவலர்கள் ஒன்றாக சேர்ந்து, தங்களது சொந்தப் பணத்தை போட்டு, அருண்காந்தி குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசிய வடுவூரைச் சேர்ந்த மலர்மன்னன், ``அருண்காந்தி துடிப்பான இளைஞர். தமிழ்நாடளவுல புகழ்பெற்ற கபடி வீரர். காவல்துறை கபடி அணியிலயும் சிறப்பான வீரர்.


அருண்காந்தி, 2009-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். அந்த பேட்ஜ்ல காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்த 250 பேர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகள்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள்ல பெரும்பாலானவங்க, அருண்காந்திக்கு பரிச்சயம் இல்லாதவங்க. ஆனாலும் கூட மனிதநேயத்தோடு, தங்களோட சொந்த பணத்தைப் போட்டு, அருண்காந்தி குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருக்காங்க. இது மிகப்பெரிய உதவி. பல ஊர்கள்ல உள்ள காவலர்கள் ஒண்ணா சேர்ந்து, இதைக் கொஞ்சம் கூட சிரமமாக நினைக்காமல், இங்கேயே தேடி வந்து கொடுத்தது, உயர்வான செயல். எங்க ஊர் மக்கள் எல்லாரும் மனதார அவங்களுக்கு நன்றி தெரிவிச்சோம்.

அருண்காந்தியின் ஒரு வயது மகள் பெயரில் 6 லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட் செஞ்சிருக்காங்க. குடும்ப பாதுகாப்பு நிதியாக, 6 லட்சம் ரூபாயும் பணம் கொடுத்திருக்காங்க. 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வடுவூருக்கே வந்து, அருண்காந்தி குடும்பத்தினர் கையில இந்த உதவிகளை நேரடியாக வழங்கினாங்க. இதைப் பார்த்து, எங்க ஊர் மக்கள், நெகிழ்ச்சியில் கண்கலங்கிட்டாங்க.

தமிழகக் காவல்துறையில் பலர் ஒண்ணு சேர்ந்து, சக காவலர் குடும்பத்துக்கு இந்தளவுக்கு மிகப்பெரிய அளவுல உதவி செய்றது இதுதான் முதல்முறைனு அவங்களே சொன்னாங்க” எனக் கூறியவர், ``கொரோனா பணியின்போது, இறக்கும் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்னு தமிழக முதலமைச்சர் அறிவிச்சிருந்தார். ஆனால், அருண்காந்தி குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி அறிவிக்கப்பட்டுருக்கு. இதுகுறித்து பரிசீலிக்கக் கோரி அருண்காந்தி குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்காங்க” என்று தெரிவித்தார்,



Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Classics