எப்படி பட்ட பெரியமனது
எப்படி பட்ட பெரியமனது
.சிவாஜி யை உயிராக கருதுகின்ற ரசிகர்களுக்கு நடிப்பில் அவர் செய்த சாதனைகள் தெரிந்த அளவுக்கு அவர் செய்த உதவிகள் தெரியாது .உதவிகள் செய்யும் போது பத்திரிகைகாரர்கள் ,புகைப்படகாரர்கள் இவர்களை வைத்துகொண்டு உதவி செய்யும் பழக்கம் என்றுமே என்றுமே இல்லை .பராசக்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தனது சொந்த செலவில் கலை நிகழ்சிகள் நடத்தி தந்தவர் சிவாஜி .
ராயபேட்டை சண்முகம் சாலையில் குடியிருந்த பொது இலங்கை தமிழர்கள் சந்திக்கவந்தபோது ,எங்கள் பகுதியில் மருத்துவமனை இல்லாமல் நாங்கள் முகவும் அல்லல் படுகிறோம் ,நீங்கள் மனது வைத்து எங்களுக்கு மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என்று கேட்டபோது நான் உதவ தயாராக இருக்கிறேன் ,என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ,பராசக்தி படத்திற்கு பிறகு இலங்கை முழுதும் உங்கள் புகழ் பரவி இருக்கிறது அதனால் கலை நிகழ்சிகள் நடத்திதரவேண்டும் என்று ம் அதில் வசொல்லாகும் பணத்தை வைத்து மருத்துவமனை கட்டிகொள்கிறோம் என்று சொன்னவுடன் அடுத்த நிமிடம் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான் என்று இலங்கைக்கு வரவேண்டும் தேதியை கூறுங்கள் என்றும் என் குழுவினரோடு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி கொடுக்கிறேன் என்று சொன்னாராம் .அந்த நிகழ்ச்சிக்கான பயண செலவு முழுதும் சிவாஜியே ஏற்றுக்கொண்டாராம் .சிவாஜி கலந்து கொள்கிறார் என்று விளம்பரம் செய்தவுடன் ஒரே வாரத்தில் டிக்கெட் முழுதும் விற்றுவிட்டதாம் .
கலை நிகழ்ச்சி நடந்த அன்று மொத்த இலங்கையும் அங்கேதான் திரண்டு இருக்கிறதோ என்று என்னும் அளவுக்கு சிவாஜியை பார்க்க மக்கள் பெரும் கூட்டமாக கூடினார்கள் .எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அப்படி ஒரு கூட்டம் கூடியது இல்லையாம் என்று பத்திரிகை செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிட்டதாம் .பெரும் கைதட்டல்களுக்கு மத்தியில் சிவாஜி புரபடபோகும் போது ,பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதி மன்ற கட்சியை அவர்கள் வேண்டுகோளுக்கு இடிமுழக்கம் போல பேசி முடித்தவுடன் ,ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் ஓசை அடங்க பல நிமிடங்கள் ஆனதாம் .வசூலான 28 ஆயிரம் ரூபாயை விழா மேடையிலேயே அமைப்பாளரிடம் கொடுத்தார் .எப்படி பட்ட பெரியமனது..
