Haribharathi SanthanaKrishnan

Abstract Children Stories

4.9  

Haribharathi SanthanaKrishnan

Abstract Children Stories

ஏன் வாகனங்களில் பிரேக்குகள்

ஏன் வாகனங்களில் பிரேக்குகள்

1 min
310


ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் 


 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 


பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 


"நிறுத்துவதற்கு"


“வேகத்தைக் குறைப்பதற்கு"


“மோதலைத் தவிர்ப்பதற்கு "


"மெதுவாக செல்வதற்கு"


"சராசரி வேகத்தில் செல்வதற்கு"


என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.


“வேகமாக ஓட்டுவதற்கு", என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். 


அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. 


ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. 


உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. 


பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.


இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். 


ஒரு போட்டி தேர்வு எழுதுகிறோம். வறுமை நிச்சயமாக ஒரு தடையாகத் தான் இருக்கும். வசதி இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கற்றுக்கொள்வார்கள். வறுமையை தடை என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். 


ஆனால் நான் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற வேகம் மனதுக்குள் துளிர்க்கும் போது வாழ்க்கை பயணமும் மகிழ்வானதாக மாறிவிடும். அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.


ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது. தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.


உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.


Rate this content
Log in

More tamil story from Haribharathi SanthanaKrishnan

Similar tamil story from Abstract