STORYMIRROR

Raj kumar

Drama

5.0  

Raj kumar

Drama

சவரக்கத்தி😊

சவரக்கத்தி😊

1 min
781


"குட்டி" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர் ஆற்றிய பணியோ பெரியது😊 தோளில் வெள்ளைத்துண்டு, முகத்தில் புன்முறுவல், கதர் உள்சட்டை, கையில் மரப்பலகை-இரும்புப்பெட்டி, எளிய நடை என்று அவர் தெரு முனையில் நடந்து வருவது தெரிந்தாலே ஒரு MLA வருவது போல வீதி பரபரப்பாகி விடும்.. பெரியவர் குழந்தைகள் என ஆண்கள் அனைவரும் அழகாகத் தயாராகிவிடுவார்கள்😅 


என் பாட்டிக்கு அடுத்தபடியாக அதிகமாய் என் தலைகோதிய கைகள் அவருடையது தான்☺ தண்ணீர் தெளித்து அவர் முடித்திருத்தும் விதம் என்னவோ நம் தலையை அல்ல, தலையெழுத்தையே திருத்துவது போல இருந்தது.. ஆம், அப்போது இருந்த மகிழ்வும் நிம்மதியும் அவர் தொழிலை விட்ட பின் கிடைக்கவில்லை🕵


தலைக்கு 2 முதல் 4 ரூபாய், தீபாவளி பொங்கல் நேரங்களில் குடும்பங்கள் கொடுக்கும் புதுச்சட்டை என எளிய வாழ்வு அவருடையது😇 எளிமை,ஒழுக்கம்,சகிப்புத்தன்மை என அனைத்தையும் 15 நிமிடங்களில் கற்றுக்கொடுத்த உங்களுக்கு நன்றிகள் "குட்டி தாத்தா"💐


Rate this content
Log in

Similar tamil story from Drama