STORYMIRROR

anuradha nazeer

Classics

3  

anuradha nazeer

Classics

சரியான வழிகாட்டி

சரியான வழிகாட்டி

2 mins
235


மாணவன் பெலிக்ஸ் ஜாணின் தந்தை பிரைட் ஜாண் கூறுகையில், ``நான் டெம்போ டிரைவராக இருக்கிறேன். என் மகன் விஞ்ஞானி ஆக வேண்டும் என ராகுல் காந்தியிடம் கூறியிருந்தான். அவனது ஆசையை நிறைவேற்றும்விதமாக ஐ.எஸ்.ஆர்.ஓ-வை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார் ராகுல் காந்தி. அது சம்பந்தமாக சிலர் எங்களிடம் பேசினர். வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ-வுக்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக வரும் 15-ம் தேஎதி கொரோனா டெஸ்ட் எடுக்கவிருக்கிறோம். என் மகனின் லட்சியத்துக்கான படிக்கல்லாக இது இருக்கும்" என்றார்.

மாணவன் ஆன்றணி பெலிக்சுக்கு ரன்னிங் ஷூ வாங்கி அனுப்பிய ராகுல் காந்தி. மற்றொரு சிறுவனான பெலிக்ஸ் ஜாண் வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ-வைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் முளகுமூட்டிலுள்ள பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி தண்டால் எடுத்த நிகழ்வு வைரலானது. முளகுமூடு பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக பரைக்கோடு பகுதியில் ராகுல் சென்று கொண்டிருந்தபோது சில சிறுவர்கள் கையில் காமராஜர் போட்டோ மற்றும் பூச்செண்டுகளுடன் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த ராகுல் காந்தி உடனடியாக காரிலிருந்து இறங்கினார். அந்தச் சிறுவர்களின் தோள்மீது கை போட்டபடி அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்களில் ஒரு சிறுவன் தன் பெயர் ஆன்றனி பெலிக்ஸ் என்றும், ஆறாம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்தான். மற்றொரு சிறுவன் தன் பெயர் பெலிக்ஸ் ஜாண் என்றும் 4-ம் வகுப்பு படிப்பதாகவும் கூறியிருக்கிறான். அருகில் உள்ள டீக்கடைக்கு சிறுவர்களை அழைத்துச் சென்ற ராகுல் காந்தி இரண்டு மாணவர்களுக்கும் டீ வாங்கிக்கொடுத்து அவர்களிடம் உரையாடினார்.

மற்றொரு சிறுவனான பெலிக்ஸ் ஜாண், தான் விஞ்ஞானி ஆக விரும்புவதாக தெரிவித்திருக்கிறா. அதற்கு இஸ்ரோ-வைப் பார்வையிட ஏற்பாடு செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துவிட்டுச் சென்றார். இந்தநிலையில், சிறுவன் ஆன்றணி பெலிக்சுக்கு ஷூ வாங்கி அனுப்பியிருக்கிறார் ராகுல்காந்தி. மேலும் மற்றொரு சிறுவனான பெலிக்ஸ் ஜாண் வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள இஸ்ரோ-வைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

ஷூ கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மாணவன் ஆன்றனி பெலிக்ஸ் கூறும்போது, ``எனக்கு மும்பையிலிருந்து ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது, உள்ளே ஸ்போர்ட்ஸ் ஷூ இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். சர்ப்ரைஸாக ராகுல் காந்தி எனக்காக அனுப்பித்தந்த ஷூ-வை நண்பர்களிடம் காட்டி பெருமைப்பட்டேன். எனக்கு ஷூ அனுப்பித்தந்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளேன்" என்றான்.

ஆன்றணி பெலிக்ஸின் தந்தை ஆன்றணி சேவியர் கூறுகையில், ``நான் அழகியமண்டபத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளேன். என் மகனுக்கு ஓட்டப்பந்தயத்தில் தீவிர ஆர்வம் உண்டு. அழகியமண்டபம் முதல் சுங்கான்கடை வரை சுமார் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு மணி நேரத்தில் ஓடிச்செல்வான். தினமும் என் மகன் ஓடும்போது நான் பின்னால் பைக்கில் செல்வேன். அவனது ஆர்வத்தை முறைப்படுத்த சரியான வழிகாட்டி இல்லாமல் இருந்தது. இப்போது ராகுல் காந்தி வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.



Rate this content
Log in

Similar tamil story from Classics