சொல்ல மறந்தார்கள்
சொல்ல மறந்தார்கள்
ஈரோட்டில் பழய காங்கிரஸ் மாநாடு நடந்தது.அதில் தங்கப் பதக்கம் நாடகத்தின் நடுவில் பெருந்தலைவர் தங்கப் பதக்கம் அணிவித்தார். அதை அங்கேயே ஏலம் விட்டார் அண்ணன். அதை குமார பாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணனின் நண்பர் 8000ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்.ரூ10000கொடுப்பது அவருக்கு பெரிதில்லை என்றவுடன் அவர்10000கொடுத்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.அதையும் அத்தோடு நாடகத்திற்காக விழா கமிட்டி தந்த 10000த்தையும் மேடையிலேயே திரு.கக்கன் அவர்களுக்கு 20000பணமுடிப்பு தந்தார்.அந்த மாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமைச்சர் கக்கன் அவர்கள் மிக வறுமையில் இருப்பதாக நடிகர் திலகம் கேள்விப்பட்டார்.
தன்னுடைய சிவாஜி நாடக மன்றத்தின் மூலமாக சேலத்தில் ஒரு நாடகம் நடத்தினார். அதில் வசூலான அனைத்து தொகையினையும் பணமுடிப்பாக ஒரு விழாவில் சிவாஜி கக்கனுக்கு அளித்தார். விழாவுக்கு தலைமை தாங்கிய காமராஜர் சிவாஜிக்கு ஒரு தங்க சங்கிலியை அணீவித்திருக்கிறார். சிவாஜி அந்த தங்க சங்கிலியை அதே மேடையில் ஏலம் விட்டு அதையும் கக்கனுக்கே அளித்திருக்கிறார். எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இது போன்ற செய்திகளயெல்லாம் வலைதளங்களில் தேடி தேடி தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த செய்திகளையெல்லாம் ஏன் ஊடகங்களும், தலைவர்களும் சொல்ல மறந்தார்கள்...?
