சமூக வலைத்தளங்களில் மிகவும் பரிணாம வளர்ச்சி
சமூக வலைத்தளங்களில் மிகவும் பரிணாம வளர்ச்சி


நான் சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிதாக வளர்வதை கண்ட சிலருக்கு என் வளர்ச்சி பொறுக்க வில்லை அதனால் என்னை எந்த அளவு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு எனது பேரழிவுக்கு காரணமாக இருந்தார்கள்.
எல்லா சமூக வலைதளங்களிலும் புதுசா, புதுப் பெயரில் கணக்கு ஆரம்பிச்சிருக்கேன். சோஷியல் மீடியாவில் என் பேரையும் பிம்பத்தையும் அவங்களால சிதைக்க முடிந்தது. ஆனால் என்னுடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் என்னைக்குமே சிதைக்க முடியாது. இனி நான் ஒரு முகமூடியைக் குறியீடா வெச்சுக்கிட்டு தொடர்ந்து முகம் இல்லாம இயங்கப் போறேன்."
``உருவம் இருந்தால் தானே சிதைக்க முடியும். இனி உருவம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து என்னோட கருத்துகள் சமூகத்துக்குப் போய்க்கிட்டேதான் இருக்கும். என்ன புதிய கணக்குகள் என்பதால் மக்களிடம் சீக்கிரமா போய் சேராது. ரீச் ஆக கொஞ்சநாள் ஆகும்.
அவ்வளவுதான்! ஆனா கூடிய சீக்கிரமே மக்களை என்னால் ஈர்த்துவிட முடியும்" என்று தன்னம்பிக்கையுடன் கூறிய பீனிக்ஸ் பறவை போன்ற அந்த நெட்டிசனை ஆச்சர்யத்துடன் பார்த்தான் நண்பன்!