anuradha nazeer

Classics Inspirational

4.5  

anuradha nazeer

Classics Inspirational

சிவாஜி வரலாற்றுக் கதை

சிவாஜி வரலாற்றுக் கதை

1 min
232


நடிகர் திலகம் சிவாஜி. இது சராசரி கவிதையன்று .இது ஒரு வரலாற்றுக் க(வி)தை .அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன்


Rate this content
Log in

Similar tamil story from Classics