சில வரிக் கதை...
சில வரிக் கதை...


ஒரு அசாதாரண காலை..
அலைபேசி சிணுங்கியது...
எதிர்முனையில் குரல்..
அடுத்த அரைமணி நேரத்தில் என் திருமணம்..
உன்கூட சேர்ந்து வாழ முடியல..
உடம்ப பாத்துக்கோ..
ஒழுங்கா சாப்டு..
.
.
.
(ஆசுவாசமில்லா சுவாசம்)
.
.
உன்னை காதலிக்கிறேன்
.
.
தொடர்பு துண்டிக்கப்பட்டது..(முற்றிலும்)
...., ஆறாண்டுக்கு முன் நடந்தது..
ஒவ்வொரு அதிகாலையும்
என்னுள் தொடர்கிறது...
நித்திரை மாத்திரை தேவையில்லை..
நினைப்பு மாத்திரம் போதும்..
நெஞ்சில் பெருக்கெடுத்து
நேத்திரம் வழிகிறது..
இணையாக் காதல்
“இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவை”...