சில குட்டி கதைகள்
சில குட்டி கதைகள்


ஒரு வரி கதை எனப்படுவது, என் பொழுதுபோக்கு. அவைகள் பெரும்பாலும் நாம் செய்யும் சாதாரண விஷயமாக இருக்கும். முரண்பாடு நிறைய இருக்கும்.
தன் பெண்ணிற்கு தரும் சுதந்திரத்தை மனைவிக்கும் தர பலர் மறப்பது ஏனோ?
நம்மை மதிக்க காத்திருக்கிறார்களோ இல்லையோ, மிதிக்க காத்திருக்கிறார்கள்! 😂😂🤭🤭
கண்ணீரின் வலி புரிந்தவர்கள் கண்டிப்பாக மற்றவர்கள் கண்ணில் அதை வர விடமாட்டார்கள்.
தன் குழந்தை இருந்த அவசர சிகிச்சையின் வெளியில் அழுது கொண்டிருந்த அம்மாவை “அழாதே!” என்று தேற்றியது, மார்பக புற்று நோயில் தாயை இழந்த குழந்தை.
அன்றுவரை மின் தூக்கி இல்லாமல் தன்மீது ஏறி வந்தவர்கள் இன்று தன்னை மறந்ததை எண்ணி ஏங்கின படிகள்.
மழை வருகிறதா என்று தொலைக்காட்சியை கவனித்து கொண்டு இருந்த பேரனுக்கு முன்னால் நிலத்தில் விதைகளை விதைத்தார் அந்த விவசாயி.
ஒரு மரணித்த மனிதரை நாம் தூற்றாமல் இருக்கக் காரணம், அவர் மீது மரியாதை என்பதை விட, நம் மரணத்தின் போது என்ன பேசுவரோ என்ற பயம் தான்.
ஒரு வரி கதை எழுத ஒரு மணி நேரமாக அமர்ந்தும் ஒன்றும் தோன்றாததால், ஒரு வழியாக கைபேசியை அணைத்தாள்.
ஸ்மட்ஜ் ஆகாத கண் மை வாங்கி அணிந்து, அடுத்த நாள் அதை அழிக்க முடியாமல் அவஸ்தை பட்டாள்.
படுத்தும் குழந்தை தூங்கியவுடன் அது விழிக்கும் வரை ஏக்கமுடன் காத்திருப்பவள் தான் அம்மா.