அவள் ஒரு கனவு...
அவள் ஒரு கனவு...


கனவில் வரும் நினைவுகள் யாவும் கற்பனை இல்லை. இன்று எழுந்தவுடன் கனவில் வரைந்த ஓவியம் ஒரு காகிதத்தில் வரைகிறேன்... வரைந்ததும் காகிதத்தில் ஒரு பெண்ணின் உருவமாய் இருக்கிறது... யார் இவள் என்று நினைக்கிறேன்.... தெரியவில்லை யார் இந்த தேவதை என்று....
ஓவியத்தை நினைத்து கொண்டு அலுவலகம் சென்றேன். அங்கே திடுக்கிடும் ஒரு சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தேன்... ஓவியத்தில் இருக்கும் பெண் மயக்கம் அடைந்து இருக்கிறாள்... தண்ணீரை அவள் மீது பட்டும் படாதவாரு தெளித்தேன்..
அவள் எழுந்து பார்த்த கனம் சொர்க்கத்தில் இருக்கிறது போல ஆனந்தம் மனதிற்கு தோன்றியது... அவள் மனதில் இடம் பிடிக்க ஏங்கும் மணம்... அவளிடம் பேச முடியவில்லை... இருவரும் பார்த்து கொண்டே எழுகிறோம்... அவள் தடுக்கி நான் அவள் மேல் சாயா... இருவருக்கும் இனம் புரியாத சந்தோஷம் அடைந்தோம்....
இதுதான் காதலா என நினைக்கிறேன்.... அவள் என்னிடம் பேச தொடங்கினார.... இருவரும் பேச நேரம் போவதே தெரியவில்லை... அந்த நேரம் யாவும் வாழ்க்கையில் கிடைக்காத ஆனந்தமாய் இருந்தது... திடீரென்று கடிகாரம் அடிக்கிறது. அப்போது தான் தெரிகிறது கனவில் வாழ்கிற வாழ்க்கை தான் காதல் என்று....