அதிசயம்
அதிசயம்


ரோசி, ஒரு அழகான, பொருமையான, இளம் கிராமாத்து பெண். கிராம மக்கள் எல்லோருக்கும் அவள் செல்ல
பெண். யார் என்ன உதவி கேட்டாளும் தட்டாமல் செய்யும் குணம் அனைவருக்கும் அவளை பிடிக்கும். அவள் தன் பெற்றோருடன் ஐரோப்பா நாட்டில் ஊரை தாண்டி இருந்த மலையடிவாரத்திலிருந்த ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். அவர்களுக்கு ஒரு பழதோட்டமும், காய்கறிகள் தோட்டமும் இருந்தது.
அவள் தாயார் தினமும் தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளை எடுத்து, கூடைகளில் நிரப்பி, ரோசியின் தந்தை அந்த கூடைகளை தன் ஒற்றை குதிரை பூட்டிய வண்டியில் ஏற்றி நகருக்குள் சென்று விற்று விட்டு மாலையில் வீடு வந்து சேருவார். ரோசிக்கு பெல்லா என்று ஒரு சிநேகிதி இருந்தாள். இருவரும் இணை பிரியா தோழிகள். தினமும் ஒன்றாக பள்ளிக்கு செல்வரர்கள்.
இப்படி இனிமையான வாழ்கையில், திடீரென்று ஒரு விந்தை நடந்தது. அன்று ரோசிக்கு பள்ளி விடுமுறை. அவள் அம்மா தோட்டத்திற்கு அவள் வேலைகலை பார்க்க சென்று விட்டாள். விடுமுறையானதால் அவள் விடிந்து சில மணி நேரம் கழித்து விழித்தாள். அவள் தன் அன்றால் கடண்களை முடித்துவிட்டு, விளையாட செல்ல பெல்லாவிற்காக காத்திருந்தாள். திடீரென்று மழை மேகம் மூடி கொண்டு வந்தது. பெல்லாவும் வந்து விட்டாள்.
ஆனால் இருவருக்குமே வெளியே சென்று விளையாட முடியாதே என்ற கவலை. மேகம் மூடி பயங்கரமான இருட்டாகி விட்ட்து. இதுபோன்ற இருட்டை அவர்கள் இதுவரை பார்த்தது இல்லை. இருவரும் பயந்து போய் தங்கள் கரங்களை கோர்த்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்கள். கிராமத்தில் மொத்தமே 25 வீடுகள்தான் இருந்தன.
ரோசிக்கு தோட்டத்திற்கு சென்றீருக்கும் அம்மாவின் நினைவு வந்தது. உடனே தனக்கும் அம்மாவிற்கும் குடைகளை எடுத்து கொண்டு பெல்லாவிடம் சொல்லிவிட்டு தோட்டத்தை நோக்கி சென்றாள். அதற்கு பெல்லா, இரு ரோசி, தனியாக செல்லாதே, நானும்வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவளும் ரோசியுடன் சென்றாள்.
சில அடி தூரம் சென்றவுடன், அதிபயங்கரமாக இருட்டி கொண்டு வந்தது. செல்கிற் பாதைகூட தெரியவில்லை. பீதியில் உறைந்தார்க்ள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். ரோசி, ரோசி என்ன்று கூப்பிடும் குரல் கேட்டது.
அது அவள் அம்மாவின் குரல். உடனே ஓடி சென்று அம்மாவை கட்டி பிடித்து கொண்டார்கள். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி இவர்களை நோக்கி வந்தது. அந்த ஒளியை பார்க்க முடியாமல் மூவரும் கண்களை மூடி கொண்டனர்.
பிறகு என்ன நடநதது என்று மூவருக்கும் தெரியவில்லை. அவர்கள் கண் விழித்து பார்த்த போது வீதியின் ஒரமாக கிடந்தனர். சிறிது தூரத்தில் வீடுகள் எரிந்து சாம்பலாகி இருந்தன. மூவரும் அருகில் ஓடினர். ரோசி அவள் அப்பாவையும், பெல்லா அவள் பெற்றோரையும் தேடினர்.
யாரும் பதில் கொடுக்க்வில்லை. அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர், இவர்கள் யார் என்று விசாரித்து விட்டு, இங்கு என்ன நடந்தது என்று விளக்கினார். இரண்டு நாட்களுக்கு முன் எரிமலை வெடித்து , இந்த கிராமத்தையும் அதை சுற்றி இருந்த பகுதிகளையும் அழித்து விட்டது. வேலைக்காக நகருக்குள் சென்ற சிலர் மட்டும் தப்பித்தனர் எனறார்.
அதை கேட்டவுடன் ரோசிக்கு தன் அப்பா தப்பி விட்டார் என்று மகிழ்ச்சி ஆகிவிட்ட்து. பெல்லா அவள் பெற்றோர்களை நினைத்து வருந்தினாள். மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
யார் இவர்களை காப்பற்றினார். ஏன் இவர்களை மட்டும் காப்பாற்றினார், இந்த இரண்டு நாட்கள் எங்கிருந்தார்கள்., என்று அந்த மூவருக்கும் நமக்கும் ஒரு புரியாத புதிராக இருக்கிறது.