அப்பா
அப்பா
ஒரு வார்த்தை அப்பா என்ற சொல்லில் எவ்வளவு அர்த்தம் உள்ளது என்பதை இப்போது தான் புரிந்து கொள்கிறேன் அப்பா இறந்து ஒரு வருடத்திற்கு அப்பால்.
ஆம், அனைவரும் ஒரு வருட நினைவு தினத்தை அனுசரிக்க தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் என் மனம் முழுவதும் அவரின் நினைவுகள் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவருடன் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தவுடன் வந்த அந்த ஒரு தொலைபேசி அழைப்பு என் மொத்த வாழ்க்கையின் ஒரு நிமிடத்தை அசைத்து பார்த்தது.
ஆம் அன்று எனக்கு தோன்றவில்லை அவர் இனி என்னிடம் பேச மாட்டார் என்று.நாட்கள் செல்ல செல்ல அவருடைய வெறுமையை எண்ணி துடித்து கொண்டிருக்கிறேன்.
தினமும் ஒரு அழைப்பு , எவ்வளவு திட்டினாலும் சிரித்துக் கொண்டே கேட்பது , எனக்காகவே நீங்கள் பிறந்து வந்துள்ளீர்கள் என்று நான் நினைத்தேன்.
மரியாதையாகவும் அன்பாகவும் தாங்கள் மற்றவர்களிடம் பழகும் பண்பை பார்த்து நானும் அதேபோல் இருக்க வேண்டும் என்றும் நினைத்துள்ளேன்.
தாங்கள் இப்போது எங்கு உள்ளீர்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நினைத்திக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் என் நினைவிலும் தினம் தினம் நிகழ்வுகளிலும் என்னுடன் தாங்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்!!!!
